ஜூன் 08, 2020 12:00 AM
ஜூன் 08, 2020 12:00 AM
இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் என்பது பாதுகாப்பு, தரம் மற்றும் அளவு ஆகியவற்றை உறுதி செய்யும் பொறியியல் துறை.
இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், தொழில் மற்றும் உற்பத்தித்தொழிற்சாலைகளின் பாதுகாப்பு, தரம் மற்றும் அளவு ஆகியவற்றுக்கு முழுமையான தீர்வை வழங்குகிறது.
வணிகத்தின் ஒவ்வொரு அம்சமும் பின்வருமாறு முன்னுரிமைகளை பிரதிபலிக்கிறது.
I) நமது மக்களின் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு ii) பணி மற்றும் தயாரிப்புகளின் தரம் iii) இறுதியாக குறைந்த அளவில் கழிவுப்பொருட்களின் உற்பத்தி.
இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவில், உலகெங்கிலுமுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரி நிறுவனங்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை வழங்குகின்றன. இந்தியாவில் இந்தத்துறையில் இளங்கலை அளவில் கீழ்க்கண்ட பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.
i) எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன்இன்ஜினியரிங்ii) இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் iii) இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் இன்ஜினியரிங்
இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் என்பது எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் மற்றும் மெக்கானிக்கல் துறைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பல்துறைப் படிப்பாகும்.
1949 ஆம் ஆண்டில், அதாவது சுதந்திரம் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி, சென்னை) வலுவானதொழில்நுட்பத்தளத்துடன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவு, இன்ஸ்ட்ருமென்ட் டெக்னாலஜி என்ற பெயரிலும் ஏரோனாட்டிகல், ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளையும் சேர்த்து வழங்கியது. இவை சுதந்திர இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.
இவ்வாறு 1949 ஆம் ஆண்டில் ஆரம்பமான இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவானது, மற்ற பாடங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாகவும், பல நிறுவனங்களில் நன்கு நிறுவப்பட்டும் வருகிறது.
இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் மாணவர்கள் பயிலும் பாடத்திட்டமானது எலக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், வேதியியல், மெக்கானிக்கல், சாப்ட்வேர் ப்ரொக்ராமிங் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்களைக் கொண்டிருப்பதால் ஐ.டி / ஐ.டி.இ.எஸ் நிறுவனங்கள் மற்றும் பொறியியல், கொள்முதல் கட்டுமானம் (ஈ.பீ.சி) போன்ற பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை கொண்டு வருகிறது.
ஐ.டி / ஐ.டி.இ.எஸ் நிறுவனங்கள் மற்றும் பொறியியல், கொள்முதல் கட்டுமானம் (ஈ.பீ.சி) போன்ற பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக்கு இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியர் (பொறியாளர்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராவார். மேலும், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் கீழ்க்கண்ட பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளில் தடம்பதித்துள்ளது
• விமானம் / விமானகருவிகள்தயாரிப்பு• பகுப்பாய்வு கருவிகள்•ஆட்டோமொபைல் துறை•இரசாயனம், பெட்ரோகெமிக்கல் துறை•ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை•சுற்றுச்சூழல் கண்காணிப்புத்துறை•உணவு மற்றும் பானத்தொழில்கள் துறை.•இரும்பு, எஃகு மற்றும் அலுமினிய தொழில்டத்துறை•எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள்.•மின் உற்பத்தி கருவி (சூரிய, வெப்ப, ஹைடல், அணு, காற்று)•கூழ் மற்றும் காகிதத்தொழில்கள் துறை.•ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்.
ஆகவே இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியர் (பொறியாளர்), வன்பொருள்(Hardware) மற்றும் மென்பொருள்(Software) ஆகிய இரண்டு தொழிற்துறைகளுக்கும் பொருத்தமானவராகிறார், மேலும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியியலாளர்கள் (இன்ஜினியர்கள்) சிக்கலைத்தீர்ப்பதில் திறமைவாய்ந்தவர்களா கருதப்படுகிறார்கள்.
எதிர்கால தொழில்நுட்பமாகக் கருதப்படும் ஆட்டோமேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்குடன் மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டதாகும்.
- ஜெய்பவானி சிவாஜி
