sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

இந்தோனிசிய பல்கலை உதவித்தொகை

/

இந்தோனிசிய பல்கலை உதவித்தொகை

இந்தோனிசிய பல்கலை உதவித்தொகை

இந்தோனிசிய பல்கலை உதவித்தொகை


ஜூலை 02, 2021 12:00 AM

ஜூலை 02, 2021 12:00 AM

Google News

ஜூலை 02, 2021 12:00 AM ஜூலை 02, 2021 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தோனிசியா அரசாங்கத்தின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லம்ப்புங் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கையை வழங்குகிறது.

படிப்பு நிலைகள்:
பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
பிரிவுகள்:
எக்னாமிக்ஸ் அண்ட் பிசினஸ், சோசியல் அண்ட் பொலிட்டிக்கல் சயின்சஸ், லா, டீச்சர் டிரைனிங் அண்ட் எஜுகேஷன், மேத்மெடிக்ஸ் அண்ட் நேச்சுரல் சயின்சஸ், அக்ரிகல்ச்சர், இன்ஜினியரிங், மெடிசின் ஆகிய பிரிவுகளின் கீழ் ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. 

தகுதிகள்:

* இந்தோனிசியா குடிமகனாக இருக்கக் கூடாது. 
* பல்கலைக்கழகத்தில் முழுநேரமாக வழங்கப்படும் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு /  முதுநிலை பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கை பெற முழு விருப்பம் இருத்தல் வேண்டும். 
* இந்தோனிசிய மொழியை பேச் தெரிதல் அவசியம் அல்லது இந்தோனிசிய மொழி படித்ததற்கான சான்றிதழ் அல்லது பி.ஐ.பி.ஏ.,  சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
* மாணவர் சேர்க்கைக்கான நேர்முகத்தேர்வில் பங்கேற்க சுற்றுலா விசாவில் இந்தோனிசியா செல்ல விருப்பம் இருக்க வேண்டும் அல்லது வீடியோ வாயிலாகவும் நேர்முகத்தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி மேல்நிலை வகுப்பு சான்றிதழ் / டிப்ளமா / இளநிலை பட்டப்படிப்புகள் அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சான்றிதழ் மற்றும் ஆங்கில மொழி அல்லது இந்தோனிசிய மொழி கற்றலுக்கான சான்றிதழ், மாணவரது சுய விபரம், பாஸ்போர்ட், மாணவரது புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
உதவித்தொகை விபரம்:
கல்விக் கட்டணம், உணவு, தங்குமிட வசதி, ஸ்டடி பர்மிட் ஆகியவை உதவித்தொகையில் அடங்கும். 

விபரங்களுக்கு
 
இணையதள முகவரி:
http://io.unila.ac.id/university-of-lampung-scholarship
வாட்ஸ் ஆப் எண்:
+62-81369197495






      Dinamalar
      Follow us