தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இத்தாலிய அரசு உதவித்தொகை

இத்தாலிய அரசு உதவித்தொகை

இத்தாலிய அரசு உதவித்தொகை


ஜூலை 02, 2021 12:00 AM

ஜூலை 02, 2021 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 02, 2021 12:00 AM ஜூலை 02, 2021 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தாலிய அரசின் வெளிநாட்டு விவகாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான அமைச்சகம், இத்தாலிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
படிப்புகள்:
முதுநிலை பட்டப்படிப்புகள் கலை, இசை மற்றும் நடனம் சார்ந்த துறைகளில் உயர்கல்விபிஎச்.டி.,ஆராய்ச்சி திட்டங்கள்
தகுதிகள்
இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, இத்தாலிய கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெறுவதற்குரிய கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குறைந்தது 15 பல்கலைக்கழக கிரிடிட்ஸ் -சி.எப்.யு., பெற்றிருக்க வேண்டும்.
கலை, இசை, நடனம் ஆகிய படிப்புகளுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மாணவர் சேர்க்கைக்கான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
பிஎச்.டி., படிப்புகளுக்கும், அட்மிஷன் பெறும் கல்வி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் உரிய கல்வித்தகுதியும், மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதமும் பெற்றிருக்க வேண்டும். 
கல்வியாளர்களின் வழிகாட்டுதல்களின்கீழ் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி படிப்புகளில், குறிப்பிட்ட ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக, இத்தாலியன் ரிசர்ச் கவுன்சில் -சி.என்.ஆர்., இத்தாலியன்  நேஷனல் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெல்த் - ஐ.எஸ்.எஸ்., இத்தாலியன் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்கிளியர் பிசிக்ஸ் - ஐ.என்.எப்.என்., இத்தாலியன் நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் அஸ்ட்ரோபிசிக்ஸ் - ஐ.என்.ஏ.எப்., தி இத்தாலியன் இன்ஸ்டிடியூட் பார் என்விரான்மென்டல் புரொடக்சன் அண்ட் ரிசர்ச் - ஐ.எஸ்.பி.ஆர்.ஏ., மற்றும் பிற நிறுவனங்களில் இதில் அடங்கும்.
இவை தவிர, பயிற்று மொழிக்கு ஏற்ப உரிய மொழிப்புலமை சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம்.

வயதுவரம்பு:
 முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் கலை, இசை, நடனம் ஆகிய படிப்புகளுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்புகளுக்கு 30 வயதிற்குள்ளும் இதர ஆராய்ச்சி திட்டங்களுக்கு 40 வயதிற்குள்ளும் இருத்தல் அவசியம்.
உதவித்தொகை:
கல்விக்கட்டணம், மருத்துவக் காப்பீடு ஆகியவை இந்த இத்தாலிய அரசு உதவித்தொகை திட்டத்தில் அடங்கும். மேலும், செலவீனங்களுக்காக மாதம் 900 யூரோக்கள் வழங்கப்படும். 
உதவித்தொகை காலம்: 
6 மாதங்கள் அல்லது 9 மாதங்கள். மாணவரகளின் கல்வி செயல்பாடுகளைப் பொறுத்து அடுத்த ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
விபரங்களுக்கு:
https://studyinitaly.esteri.it

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us