தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நீட் யு.ஜி., -2021

நீட் யு.ஜி., -2021

நீட் யு.ஜி., -2021


ஜூலை 23, 2021 12:00 AM

ஜூலை 23, 2021 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 23, 2021 12:00 AM ஜூலை 23, 2021 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய தேர்வு, ’நீட் - யு.ஜி.,’ என சுருக்கமாக அழைக்கப்படும் 'நேஷனல் எலிஜிபிலிட்டி  கம்  என்ட்ரன்ஸ் டெஸ்ட் - அண்டர் கிராஜுவேட்’!
மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வை ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
படிப்புகள்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., மற்றும் பி.எச்.எம்.எஸ்., ஆகியவற்றில் எந்த ஒரு படிப்பையும் இந்தியாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் ‘நீட்’ தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்
மாநில கல்வி நிறுவனங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை 'நீட்’ அடிப்படையில் நடைபெறுகிறது. தேசிய இடஒதுக்கீட்டு இடங்கள், மாநில அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர் இடங்கள் என இட ஒதுக்கீட்டு இடங்களும் 'நீட்’ தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன.

தேர்வு முறைகள்
இயற்பியல் மற்றும் வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் தலா 45 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பாடங்களிலும் இரண்டு ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகள் இடம்பெறும். ‘ஏ’ பிரிவில் 35 கேள்விகளும் ‘பி’ பிரிவில் 15 கேள்விகளும் கேட்கப்படும். மாணவர்கள், 15 கேள்விகளில் ஏதேனும் 10 கேள்விகளுக்கு விடை அளித்தால் போதும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் கேட்கப்படும் 180 கேள்விகளுக்கு அதிகபட்சம் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து கேள்விகளும் ‘மல்டிபிள் சாய்ஸ்’ வகையில் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் 
தேர்வு காலம்:
3 மணி நேரம்.

கேள்விகள் இடம் பெறும் மொழிகள்: 
ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காளி, குஜராத்தி, மலையாளம், கன்னடா, மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியை தேர்வு செய்துகொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:
தேர்வு அறைக்குள் மொபைல் போன், கால்குலேட்டர், பேனா, பெல்ட், வாட்டர் பாட்டில், உணவு உட்பட பல்வேறு பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடை கட்டுப்பாடும் உண்டு. ஆகவே, மாணவர்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் விதிமுறைகளை நன்கு அறிந்துகொள்வது அவசியம்.
விபரங்களுக்கு:
https://neet.nta.nic.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us