தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நாட்டா தேர்வு

நாட்டா தேர்வு

நாட்டா தேர்வு


ஆக 07, 2021 12:00 AM

ஆக 07, 2021 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 07, 2021 12:00 AM ஆக 07, 2021 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய கல்வி நிறுவனங்களில், பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் -பி.ஆர்க்., படிப்பில் சேர்க்கை பெற எழுதவேண்டிய முக்கிய தேர்வு ’நாட்டா’ எனும் ’நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர்’!
இந்திய அரசின், ஆர்க்கிடெக்ட்ஸ் சட்டம் 1972ன் படி ஏற்படுத்தப்பட்ட ‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ ஒவ்வோரு ஆண்டும் இத்தேர்வை நடத்துகிறது. 

கல்வி நிறுவனங்கள்: 
பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,),  நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,), தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என இந்தியாவில் ஆர்க்கிடெக்சர் படிப்பை வழங்கும் 465 கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற ‘நாட்டா’ மதிப்பெண் முக்கியத்துவம் பெறுகிறது.

தகுதிகள்:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடத்துடன் டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். இவற்றில் எதுவாயினும், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேர கால அவகாசத்துடன் இத்தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் டயாக்ரமேட்டிக் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், நியூமெரிக்கல் ரீசனிங், வெர்பல் ரீசனிங், இன்டக்டிவ் ரீசனிங், சுட்ச்சுவேஷனல் ஜட்ஜ்மெண்ட், அப்ஸ்டேரக்ட் ரீசனிங் ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் அப்ஜெக்டிவ் வடிவில், 125 கேள்விகள் இடம்பெறும். ஆன்லைன் வாயிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பிடப்பட்ட மையங்களில் ஆன்லைன் வாயிலாக இத்தேர்வு நடைபெறுகிறது. 
குறிப்பு: 
இந்தாண்டில் மூன்றாவது முறையாக இத்தேர்வு நடைபெறுகிறது. ஒரு கல்வி ஆண்டில் இரண்டு முறை மட்டுமே இத்தேர்வை எழுத முடியும். இத்தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில், பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே நம் நாட்டில் ’ஆர்க்கிடெக்ட்’ ஆக செயல்பட முடியும். 
தேர்வு மையங்கள்:
தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோயில், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
https://nataregistration.in/ எனும் நாட்டா தேர்விற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பதிவு இணையதளம் வயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
ஆகஸ்ட் 22
தேர்வு நாள்:
செப்டம்பர் 3

விபரங்களுக்கு: 

இமெயில்:
 nata.helpdesk2021@gmail.comதொலைபேசி:
9560707764, 9319275557இணையதளம்:
www.nata.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us