ஆக 24, 2021 12:00 AM
ஆக 24, 2021 12:00 AM
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை முழுக்க, முழுக்க ஆன்லைனில் நடத்துகிறது, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்!
விண்ணப்பம் முதல், விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்தல் மற்றும் இட ஒதுக்கீடு ஆணையை பெறுதல் வரை அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது.
படிப்புகள் மற்றும் கால அளவு:
பி.இ., மற்றும் பி.டெக்., படிப்பு - 8 செமஸ்டர்கள் வீதம் மொத்தம் நான்கு ஆண்டுகள்பி.இ., (சாண்ட்விச்), படிப்பு - 10 செமஸ்டர்கள் வீதம் மொத்தம் ஐந்து ஆண்டுகள்
எத்தனைப் பிரிவுகள்?
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், அக்ரிகல்சர் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், என்விரான்மெண்டல் இன்ஜினியரிங், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உட்பட ஏராளமான பாடப்பிரிவுகள்.
கல்லூரிகளில் உள்ள இடஒதுக்கீடு:
தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பல்கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகள், தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை, 'தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை - டி.என்.இ.ஏ.,’ கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பட்டப் படிப்பிற்கு, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில தொழில்பிரிவு மாணவர்களும் பொறியல் படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் சான்றிதழ்கள்:
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது அதற்கு இணையான கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் தேவைக்கு ஏற்ப இதர சிறப்பு சான்றிதழ்கள்.
'கட்-ஆப்’:
மேற்குறிப்பிட்ட மூன்று பாடங்களின் மூலம் கணக்கிடப்படும்,‘கட்-ஆப்’ மதிப்பெண் அடிப்படையிலேயே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க ‘ரேங்க்’ பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே கலந்தாய்வில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை, மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்ய முடியும்.
விபரங்களுக்கு:
இணையதளங்கள்:
www.tneaonline.org, www.tndte.gov.in/siteதொலைபேசி:
044-22351014, 22351015இ-மெயில்:
care@tneaonline.org

