sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

கவின் கலை படிப்புகள்

/

கவின் கலை படிப்புகள்

கவின் கலை படிப்புகள்

கவின் கலை படிப்புகள்


செப் 04, 2021 12:00 AM

செப் 04, 2021 12:00 AM

Google News

செப் 04, 2021 12:00 AM செப் 04, 2021 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சென்னை மற்றும் கும்பகோணத்தில் செயல்படும் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் சுவாரஸ்யமிக்க இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற இக்கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புகள்:
இளநிலை பட்டப்படிப்பு: பி.எப்.ஏ., - 4 ஆண்டுகள்துறைகள்:  விசுவல் கம்யூனிகேஷன் டிசைன், பெயின்டிங், சிற்பக்கலை, இண்டஸ்ட்ரியல் டிசைன் இன் செராமிக், இண்டஸ்ட்ரியல் டிசைன் இன் டெக்ஸ்டைல் மற்றும் பிரிண்ட் மேக்கிங்
முதுநிலை பட்டப்படிப்பு: எம்.எப்.ஏ., - 2 ஆண்டுகள்துறைகள்: சிற்பக்கலை, பெயின்டிங், செராமிக் டிசைன், விசுவல் கம்யூனிகேஷன் டிசைன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன்.
தகுதிகள்:
இளநிலை பட்டப்பிடிப்பிற்கு, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி. 

வயது வரம்பு:
23 வயது நிறைவடையாமல் இருத்தல் அவசியம். ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் 26 வயது நிறைவுவடையாமல் இருத்தல் வேண்டும்.
முதுநிலை பட்டப்படிப்பிற்கு உரிய துறையில் இளங்கவின் கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
மாணவர்கள் விரும்பும் படிப்பு மற்றும் கல்லூரிகளுக்கு https://www.artandculture.tn.gov.in/ta/node/add/gov-college-of-fine-art-four-yrs எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வி உதவித் தொகை
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த சில மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஒதுக்கப்படுகிறது. 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வரைப்படப் பொருட்கள் ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்புகள்
கவின் கலை படிப்புகளை படித்த, சிறந்த படைப்பாற்றல் கொண்டவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றலாம். நெசவு ஆலைகள், பத்திரிக்கை, விளம்பர நிறுவனங்கள், முன்னணி பீங்கான் நிறுவனங்கள், நெசவு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் திரைப்படத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் வேலைவாய்ப்பு பெறலாம்.
விபரங்களுக்கு:
www.artandculture.tn.gov.in 






      Dinamalar
      Follow us