sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

/

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி


நவ 19, 2021 12:00 AM

நவ 19, 2021 12:00 AM

Google News

நவ 19, 2021 12:00 AM நவ 19, 2021 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி!

முக்கியத்துவம்:
கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இக்கல்வி நிறுவனம், இதுவரை 96 நோபல் பரிசு பெற்ற அறிஞர்களை உருவாக்கியுள்ளது. 1861ம் ஆண்டு அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் பகுதியில் 168 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் தற்போது 11 ஆயிரத்து 254 மாணவர்களும், ஆயிரத்து 64 பேராசிரியர்களும் உள்ளனர். 
சர்வதேச அளவில் புகழ்பெற்ற இக்கல்வி நிறுவனம், ஏராளமான விருதுகளை பெற்றுள்ளதோடு, தரவரிசை பட்டியலிலும் பிரதான இடங்களை தொடர்ந்து வகித்து வருகிறது.
பள்ளிகள் மற்றும் படிப்புகள்:
இக்கல்வி நிறுவனம் துறைகளின் அடிப்படையில் சில பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 
* ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளானிங்* ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்* ஸ்கூல் ஆப் ஹுமானிட்டீஸ், ஆர்ட்ஸ் அண்டு சோசியல் சயின்சஸ்* சுலோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் * ஸ்கூல் ஆப் சயின்ஸ்* எம்.ஐ.டி., ஸ்வர்ஷமேன் காலேஜ் ஆப் கம்ப்யூட்டிங்ஆகிய பள்ளிகளின் கீழ், ஆர்க்கிடெக்சர், மீடியா ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், அர்பன் ஸ்டடீஸ் அண்டு பிளானிங், ஏரோநாட்டிக்ஸ் அண்டு அஸ்ட்ரோநட்டிங்ஸ், பயோலஜிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங்,  சிவில் அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங், டேட்டா, சிஸ்டம் அண்டு சொசைட்டி, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், நியூக்கிளியர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், பிலாசபி, பொலிட்டிக்கல் சயின்ஸ், ஹிஸ்ட்ரி, மேனேஜ்மெண்ட், பிரைன் அண்டு காக்னிட்டிவ் சயின்சஸ், மேத்மெடிக்ஸ், கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் உட்பட ஏராளமான துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஆய்வகங்கள்:
பாடப்பிரிவுக்கு ஏற்ப 30க்கும் மேற்பட்ட சிறப்பு ஆய்வகங்கள் மற்றும் மையங்களை கொண்டுள்ள இக்கல்வி நிறுவனம் இளநிலை பட்டப்படிப்பில் இருந்தே மாணவர்களிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆர்வத்தையும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் எண்ணத்தையும் தூண்டுகின்றன. 
மாணவர்களின் திறமையையும் மேம்படுத்தும் வகையிலான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளையும், நவீன ஆய்வகங்களையும் கொண்டு பிற கல்வி நிறுவனங்களுக்கு உதாரணமாகவும் திகழ்கிறது.
விபரங்களுக்கு:
www.mit.edu






      Dinamalar
      Follow us