/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இசையின் தரத்தை மேம்படுத்த என்ன தேவை?
/
இசையின் தரத்தை மேம்படுத்த என்ன தேவை?
நவ 15, 2008 12:00 AM
நவ 15, 2008 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமீபத்தில் இசை தொடர்பான ஒரு கள ஆய்வை ‘ஐ.ஆர்.சி.,-ஸ்பெட்ரம் ரிசர்ச் மார்க்கெட் செர்ச் அண்டு பியூச்சர் ஸ்டடீஸ்’ நிறுவனம் சென்னையில் நடத்தியது. இசைத் துறையின் தரத்தை மேம்படுத்தவும், துறை தொடர்பான வளர்ச்சி காணவும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பங்குபெற்ற பலரும் கிட்டத்தட்ட ஒரே கருத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் முக்கிய முடிவுகள் பின்வருமாறு:
- சென்னையைச் சேர்ந்த மியூசிக் அகாடமி புகழ்பெற்ற இசை விற்பன்னர்கள் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டு இயங்கும் விதத்தில் ஒரு இசைக்கல்லூரியைத் துவங்கவேண்டும். இந்த முடிவுதான் கர்நாடக இசையின் எதிர்காலத்தை நிச்சயிக்கும்.
- இந்த இசைக்கல்லூரி நல்ல தரமுள்ள தொல்லிசையை பாதுகாப்பது மற்றும் வளர்க்கும் பணிகளில் ஈடுபடவேண்டும்.
- கர்நாக சங்கீதத்தில் ஆர்வமிருந்தாலும் கூட நல்ல குருவைப் (ஆசிரியர்) பெறுவது மிக்கடினமான அம்சமாக உள்ளது. மேலும், கர்நாடக இசையைப் பயில்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும், சுற்றுப்புறமும் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.
- நல்ல ஆசிரியர்கள் வயதானதாலும், உடல் நலமின்மையாலும் அவதிப்பட்டு பயிற்றுவிக்க முடியாத நிலையில் “இ-குரு” குறையானது தொன்று தொட்டு நடைமுறையிலுள்ள அறிவு திரட்டும் முறைக்கு எதிரானதாக உள்ளது.
- நல்ல ஆர்வம், திறமை இருந்தும் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகிவரும் கர்நாடக இசையைக் காப்பாற்ற ‘கலாஷேத்ரா’ பல்கலைக்கழக மாதிரியில் ‘மெட்ராஸ் மியூசிக் அகாடமி’ ஒரு கல்வி நிறுவனத்தைக் கட்டாயம் துவங்க வேண்டும். இதன்மூலம் இசைப்படிப்புகளுக்கு புத்துயிர் ஊட்ட முடியும்.

