பிப் 23, 2022 12:00 AM
பிப் 23, 2022 12:00 AM
சைப்ரஸ் பல்கலைக்கழகம் ‘இன்டெலிஜெண்ட் கிரிட்டிக்கல் இன்பராஸ்டரக்ச்சர் சிஸ்டம்ஸ்’ பிரிவில் எம்.எஸ்சி., படிப்பிற்கான உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.
கே.ஐ.ஒ.எஸ்., ரிசர்ச் அண்டு இன்னோவேஷன் மையம், இம்பெரியல் காலேஜ் லண்டன் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரிக்கல் அண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறை இப்படிப்பை வழங்குகிறது.
படிப்பின் நோக்கம்:
ஐ.சி.டி., எனும் தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பங்களில் முற்றிலும் புத்தாக்க அறிவார்ந்த அமைப்பு முறைகள் மற்றும் உபகரணங்களின் அணுமுறையுடன் கற்பிப்பது, 'கிரிட்டிக்கல் இன்பராஸ்டரக்ச்சர் சிஸ்டம்ஸ்’ உதவியுடன் நவீன சைபர்-பிசிக்கல் சிஸ்டம்ஸ் துறையில் நிலவும் சவால்கள்களை சமாளிப்பது ஆகியவற்றை பிரதான நோக்கங்களாகக் கொண்டு இந்த படிப்பு வழங்கப்படுகிறது.
எலக்ட்ரிக் பவர் அண்டு எனர்ஜி சிஸ்டம்ஸ், வாட்டர் டிஸ்ட்ரிபியூசன் நெட்வொர்க்ஸ், டெலிகம்யூனிகேஷன் நெட்வொர்க்ஸ், டிரான்ஸ்போர்டேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சிஸ்டம்ஸ் ஆகியவற்றை இப்படிப்பு உள்ளடக்கியுள்ளது.
படிப்பு காலம்:
மூன்று செமஸ்டர்களுடன் ஒன்றரை ஆண்டுகள். பகுதி நேரமாக படிக்க விரும்புபவர்களுக்கு 6 செமஸ்டர்களுடன் 3 ஆண்டுகள்.
உதவித்தொகை திட்டம்:
மாணவர்களின் கல்வித்திறனை பொறுத்து, கல்விக்கட்டணத்தில் 50 முதல் 100 சதவீதம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. உதவித்தொகையுடன், பகுதிநேர பணிக்கான மாத ஊதியமாக மாதம் 750 முதல் 1,100 யூரோக்கள் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
இன்ஜினியரிங் அல்லது அறிவியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு.
http://www.rnsccis.ucy.ac.cy/ எனும் இணையதளம் வாயிலாக இப்படிப்பு குறித்த தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.
விபரங்களுக்கு:
https://www.education.gov.in/

