sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

மாற்றத்தில் புதுமை!

/

மாற்றத்தில் புதுமை!

மாற்றத்தில் புதுமை!

மாற்றத்தில் புதுமை!


மார் 30, 2022 12:00 AM

மார் 30, 2022 12:00 AM

Google News

மார் 30, 2022 12:00 AM மார் 30, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவிப்பதும், புதிய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதான நோக்கங்களாக உள்ளன. 
வாய்ப்புகள் பிரகாசம்

'ஸ்டார்ட் அப்’களை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகளும் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளன. 'ஸ்டார்ட் அப் இந்தியா’ என்ற திட்டமும் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதால், புத்தாக்க சிந்தனையையுடன், புதிய தொழில் துவங்க விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. 
மாறிவரும் இன்றைய காலத்திற்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களும் தேவையான மாற்றத்தை கல்வி முறையிலும் சரி, கல்வி சூழலிலும் சரி புகுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு கல்வி நிறுவனமும், சென்டர் ஆப் எக்ஸெலன்ஸ், இன்குபேஷன் மையம் ஆகியவற்றை திறம்பட செயல்படுத்துவதன் வாயிலாக மாணவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகளை ஏற்படுத்துத்தர முடியும். 
ஒரே வளாகத்தில் கல்வி நிறுவனங்கள், ஐ.டி. பூங்கா, தொழில் நிறுவனங்கள், இன்குபேஷன் சென்டர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்குவதற்கு குடியிருப்பு ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம். இதன்வாயிலாக, மாணவர்களுக்கு ’இன்டர்ன்சிப்’ வாய்ப்பை ஒரே வளாகத்தில் வழங்க முடிவதோடு மட்டுமின்றி வேலை வாய்ப்பையும் பிரகாசமாக்க இயலுகிறது. 'இன்குபேஷன் சென்டர்’ வாயிலாக புதியதாக தொழில் துவங்க விரும்பும் மாணவர்களது ’ஐடியா’க்களுக்கு உருவம் கொடுக்க முடிகிறது. 
கல்வி நிறுவனங்களின் கடமை

எந்த ஒரு துறை சார்ந்த மாணவரும், பிற துறை சார்ந்த பாடங்களை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை வழங்குவதும் அவசியமாகிவிட்டது. உதாரணமாக, மல்டிமீடியா பாடப்பிரிவை இன்ஜினியரிங் மாணவர்களும், தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகளை கலை, அறிவியல் மாணவர்களும் விருப்பப் பாடமாக தேர்வு செய்து படிக்கலாம். இத்தகைய அம்சத்தையும் ஒரு கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு திறம்பட வழங்க வேண்டியுள்ளது. அதற்கு 'சென்டர் ஆப் எக்ஸ்லென்ஸ்’ உறுதுணையாக உள்ளது. ஆகவே, 'சென்டர் ஆப் எக்ஸ்லென்ஸ்’க்கு என்று 5 தளங்கள் கொண்ட பிரத்யேக கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஐ.ஒ.டி., ஏ.ஐ., என பிரத்யேகமாக ஒதுக்கியுள்ளோம்.
கல்வி கற்பதில் மாணவர்களுக்கு சிறப்பான சூழலை வழங்கும் நோக்கில், எல்.எம்.எஸ்., எனும் தொழில்நுட்பத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்முறைப்படுத்தி விட்டோம். இதனால் ஊரடங்கு காலத்தில், உடனடியாக ஆன்லைன் வாயிலாக கல்வியை திறம்பட வழங்குவது என்பது சாத்தியமானது. ’மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற சொல்லிற்கு ஏற்ப கல்வி நிறுவனங்களும் மாற்றத்தை புகுத்த வேண்டியுள்ளது. எங்கள் கல்வி நிறுவனத்தில் அத்தகைய ஒவ்வொரு மாற்றத்திலும் புதுமையையும் புகுத்துகிறோம். 
-மதன் ஏ. செந்தில், தலைவர், ரத்தினம் கல்வி நிறுவனங்கள், கோவை.






      Dinamalar
      Follow us