தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டான்செட் - 2022

டான்செட் - 2022

டான்செட் - 2022


ஏப் 08, 2022 12:00 AM

ஏப் 08, 2022 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 08, 2022 12:00 AM ஏப் 08, 2022 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் தொழில்முறை முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வே, 'தமிழ்நாடு காமன் என்ட்ரென்ஸ் டெஸ்ட்’!
முக்கியத்துவம்:
தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இத்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே, தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடைபெறும். குறிப்பாக, அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இவைதவிர, விருப்பமுள்ள இதர கல்வி நிறுவனங்களும் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கலாம்.
பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்: 
அண்ணா பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல், கலை, அறிவியல் கல்வி நிறுவனங்கள்.
படிப்புகள்:
மாஸ்டர் ஆப் இன்ஜினியரிங் - எம்.இ.,மாஸ்டர் ஆப் டெக்னாலஜி - எம்.டெக்., மாஸ்டர் ஆப் ஆர்க்கிடெக்சர் - எம்.ஆர்க்., மாஸ்டர் ஆப் பிளானிங் - எம்.பிளான்.,மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மிஷின்ஸ்ட்ரேஷன் - எம்.பி.ஏ., மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - எம்.சி.ஏ., 
கல்வித்தகுதிகள்: 
எம்.பி.ஏ., படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., ஆகிய பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. அதேபோல், இதர படிப்புகளுக்கும், அந்தந்த துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பில், இதே மதிப்பெண் சதவீதத்தை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: 
https://tancet.annauniv.edu/tancet/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு நடைபெறும் நாள்:
எம்.சி.ஏ., - மே 14, 10:00 - 12:00 மணிவரைஎம்.பி.ஏ., - மே 14, 02:30 - 04:30 மணிவரைஎம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் - மே 15, 10:00 - 12:00 மணிவரை
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஏப்ரல் 18
விபரங்களுக்கு:
 இணையதளம்:
 https://tancet.annauniv.edu/இமெயில்:
tancetau@gmail.comதொலைபேசி:
044-22358314, 22358289

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us