sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

நீட் யு.ஜி., -2022

/

நீட் யு.ஜி., -2022

நீட் யு.ஜி., -2022

நீட் யு.ஜி., -2022


ஏப் 20, 2022 12:00 AM

ஏப் 20, 2022 12:00 AM

Google News

ஏப் 20, 2022 12:00 AM ஏப் 20, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாடு முழுவதிலும் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய தேர்வு, 'நேஷனல் எலிஜிபிலிட்டி - கம் - என்ட்ரன்ஸ் டெஸ்ட் - அண்டர் கிராஜுவேட்’!
படிப்புகள்:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., மற்றும் பி.எச்.எம்.எஸ்., 
கல்வி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்:
மாநில கல்வி நிறுவனங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை 'நீட்’ அடிப்படையில் நடைபெறுகிறது. தேசிய இடஒதுக்கீட்டு இடங்கள், மாநில அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர் இடங்கள் என இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களும்  'நீட்’ தேர்வை அவசியம் எழுத வேண்டும்.
தேர்வு முறைகள்:
மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்விற்கு https://neet.nta.nic.in எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
இயற்பியல் மற்றும் வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் தலா 45 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பாடங்களிலும் இரண்டு ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகள் இடம்பெறும். ‘ஏ’ பிரிவில் 35 கேள்விகளும் ‘பி’ பிரிவில் 15 கேள்விகளும் கேட்கப்படும். மாணவர்கள், 15 கேள்விகளில் ஏதேனும் 10 கேள்விகளுக்கு விடை அளித்தால் போதும்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் கேட்கப்படும் 180 கேள்விகளுக்கு அதிகபட்சம் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து கேள்விகளும் ‘மல்டிபிள் சாய்ஸ்’ வகையில் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் 
தேர்வு காலம்:
3.20 மணி நேரம்.
கேள்விகள் இடம் பெறும் மொழிகள்:
ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காளி, குஜராத்தி, மலையாளம், கன்னடா, மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியை தேர்வு செய்துகொள்ளலாம்.
முக்கிய குறிப்பு:
தேர்வு அறைக்குள் மொபைல் போன், கால்குலேட்டர், பேனா, பெல்ட், உணவு உட்பட பல்வேறு பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடை கட்டுப்பாடும் உண்டு. ஆகவே, மாணவர்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் விதிமுறைகளை நன்கு அறிந்துகொள்வது அவசியம்.
விபரங்களுக்கு:
https://neet.nta.nic.in/






      Dinamalar
      Follow us