sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனம்

/

ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனம்

ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனம்

ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனம்


மே 06, 2022 12:00 AM

மே 06, 2022 12:00 AM

Google News

மே 06, 2022 12:00 AM மே 06, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிறுவனம் ’இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச்’.
கல்வி நிறுவன வளாகங்கள்:
பெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொகாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி
வழங்கப்படும் படிப்புகள்
* பி.எஸ்., - இன்ஜினியரிங் அண்டு எக்னாமிக்ஸ் சயின்சஸ் -  4 ஆண்டுகள்வளாகம்:
போபால்
* பி.எஸ்-எம்.எஸ்., (டியூல் டிகிரி) - 5 ஆண்டுகள்வளாகம்:
அனைத்து வளாகங்கள்
பிரிவுகள்
* பயோலஜிக்கல் சயின்சஸ்* கெமிக்கல் சயின்சஸ்* எர்த் அண்டு கிளைமேட் சயின்சஸ் / எர்த் அண்டு என்விரான்மெண்டல் சயின்சஸ்* இன்ஜினியரிங் சயின்சஸ் - கெமிக்கல் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்* ஜியாலஜிக்கல் சயின்சஸ்* இன்டக்ரேட்டர்டு அண்டு இன்டர்டிசிப்ளினரி சயின்சஸ் - பயோலஜிக்கல் சயின்சஸ், கெமிக்கல் சயின்சஸ், டேட்டா சயின்சஸ், மேத்மெடிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ்* மேத்மெடிக்கல் சயின்சஸ்* பிசிக்கல் சயின்சஸ்
கல்வித் திட்டம்:
10 செமஸ்டர்கள் கொண்ட பி.எஸ் - எம்.எஸ்., படிப்பில், முதல் இரண்டு ஆண்டில், அறிவியல் பாடப்பிரிவில் உள்ள அடிப்படை அறிவியல் நுணுக்கங்கள் கற்று தரப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில், அறிவியல் துறையில் உள்ள ஏதேனும் ஒரு பாடப்பிரிவை முதன்மை படிப்பாக தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். ஐந்தாம் ஆண்டு முழுவதும் முழுநேர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
கல்வித் தகுதி:
பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
சேர்க்கை முறை:
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் நடத்தப்படும் கே.வி.பி.ஒய்., என்ற தேசிய அறிவியல் உதவித்தொகை தகுதி தேர்வு, அல்லது ஜே.இ.இ., அல்லது ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., ஆப்டிடியூட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 
கே.வி.பி.ஒய்., அடிப்படையில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 15ஆப்டிடியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 20
விபரங்களுக்கு:
www.iiseradmission.in






      Dinamalar
      Follow us