தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அறிவோம் நாட்டா

அறிவோம் நாட்டா

அறிவோம் நாட்டா


மே 12, 2022 12:00 AM

மே 12, 2022 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 12, 2022 12:00 AM மே 12, 2022 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ’நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர்’ தேர்வை, மாணவர்கள் இந்த ஆண்டு மூன்று முறை எழுதலாம்.
பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஆர்க்கிடெக்ட்ஸ் சட்டம் 1972ன் படி, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக செயல்படும் ‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ இத்தேர்வை நடத்துகிறது. 
கல்வி நிறுவனங்கள்: 
பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி -ஐ.ஐ.டி.,,  நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - என்.ஐ.டி., தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என இந்தியாவில் ஆர்க்கிடெக்சர் படிப்பை வழங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் ‘நாட்டா’ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தகுதிகள்:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடத்துடன் டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் இத்தேர்வில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 125 கேள்விகள் கேட்கப்படுகிறது. இத்தேர்வில் மாணவர்களின் டயாக்ரமேட்டிக் ரீசனிங், நியூமெரிக்கல் ரீசனிங், வெர்பல் ரீசனிங், இன்டக்டிவ் ரீசனிங், சுட்சுவேஷனல் ஜட்ஜ்மெண்ட், லாஜிக்கல் ரீசனிங், அப்ஸ்டேரக்ட் ரீசனிங் ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் அப்ஜெக்டிவ் வடிவில் கேள்விகள் இடம்பெறும். 

மூன்று முறை:
இந்த ஆண்டு மூன்று முறை நடத்தப்படும் இத்தேர்வை, மாணவர்கள் விருப்பபடி மூன்று தேர்வையும் எழுதலாம். இரண்டு தேர்வு எழுதும்பட்சத்தில், அவற்றில் ஒரு சிறந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மூன்று தேர்வையும் எழுதும் பட்சத்தில் சிறந்த இரண்டு மதிப்பெண்களின் சராசரி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 
தேர்வு மையங்கள்:
சர்வதேச அளவில் 168 நகரங்களில் நடத்தப்படும் இத்தேர்விற்கு, தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோயில், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
https://nataregistration.in/ எனும் அதிகாரப்பூர்வ விண்ணப்பதிவு இணையதளம் வயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
முதல் தேர்வு:
மே 23இரண்டாம் தேர்வு:
ஜூன் 20மூன்றாம் தேர்வு:
ஜூலை 11
தேர்வு நாட்கள்:
முதல் தேர்வு:
ஜூன் 12இரண்டாம் தேர்வு:
ஜூலை 3மூன்றாம் தேர்வு:
ஜூலை 24
தேர்வு நேரம்:
அனைத்து தேர்வு நாட்களிலும் காலை 10 முதல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 5.30 மணி வரை
விபரங்களுக்கு: 

இமெயில்:
nata.helpdesk2022@gmail.comதொலைபேசி:
08045549467இணையதளம்:
www.nata.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us