sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

ஜப்பானிய அரசு உதவித்தொகை

/

ஜப்பானிய அரசு உதவித்தொகை

ஜப்பானிய அரசு உதவித்தொகை

ஜப்பானிய அரசு உதவித்தொகை


மே 31, 2022 12:00 AM

மே 31, 2022 12:00 AM

Google News

மே 31, 2022 12:00 AM மே 31, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜப்பானிய அரசின் எம்.இ.எக்ஸ்.டி., எனும் கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஜப்பானிய பல்கலைக்கழகங்கள் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது.
இந்த உதவித்தொகை திட்டத்திற்கு, உரிய தகுதிகள் பெற்ற இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், இத்திட்டத்தில் தேர்வு செய்வதில் கல்வி அமைச்சகம் தலையிடாது. மாணவர்கள் நேரடியாக அதிகாரப்பூர்வ ஜப்பானிய கல்வி உதவித்தொகை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
படிப்புகள்:
அறிவியல், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டடீஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், நேவல் ஆர்க்கிடெக்சர், என்விரான்மென்டல் இன்ஜினியரிங், கெமிக்கல் படிப்புகள், வேளாண் படிப்புகள், பார்மசி, நர்சிங், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், அரசியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, ஜப்பானிய மொழி, பொருளாதாரம், தொழில்நிர்வாகம் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள்.
தகுதிகள்: 
பாடப்பிரிவுக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடும். ஏப்ரல் 2, 1998ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். மாணவர்கள் ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவராக இருத்தல் வேண்டும். ஜப்பானுக்கு வருவதற்கு முன்பாகவும், வருகை புரிந்த உடனும் ஜப்பான் நாடு குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். 
மேலும், அந்நாட்டு அரசின் கல்வித்திட்டத்திற்கு ஏற்ப ஜப்பானிய மொழியில் கற்கும் ஆர்வமும், திறனும் கொண்டிருக்க வேண்டும். உடல் தகுதியும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆகவே, தகுதியான மருத்துவரிடம் இருந்து உடல் மற்றும் மனநிலை தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். 
உதவித்தொகை விபரம்: 
தேர்வு செய்யப்படும் மாணவர்களது போக்குவரத்து செலவு, நுழைவுத்தேர்வு கட்டணம், பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தை ஜப்பானிய அரசே ஏற்கிறது. இவைதவிர, மாதம் சுமார் 71 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 2023 ஏப்ரல் முதல் மார்ச் 2028ம் ஆண்டுகள் வரையிலான 5 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 
இதில், ஓர் ஆண்டு ஜப்பானிய மொழியை கற்பதற்கான தயார்படுத்துதல் காலமும் அடங்கும்.  மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் 6 ஆண்டுகள் கொண்ட பார்மசி படிப்பு ஆகியவற்றிற்கு மார்ச் 2030 வரை அதாவது 7 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 
விபரங்களுக்கு:
www.education.gov.in






      Dinamalar
      Follow us