sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

அறிவோம் சி.ஐ.எப்.என்.இ.டி.,

/

அறிவோம் சி.ஐ.எப்.என்.இ.டி.,

அறிவோம் சி.ஐ.எப்.என்.இ.டி.,

அறிவோம் சி.ஐ.எப்.என்.இ.டி.,


மே 31, 2022 12:00 AM

மே 31, 2022 12:00 AM

Google News

மே 31, 2022 12:00 AM மே 31, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது, சென்டரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசிரிஸ் நாட்டிக்கல் அண்டு இன்ஜினியரிங் டிரைனிங்!
நோக்கம்:
மீன்பிடித்தல் மற்றும் வணிகக் கடல் போக்குவரத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான மனப்பான்மையை வளர்ப்பதற்குரிய மனிதவளத்தை உருவாக்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது. அதன்படி, இப்பிரிவுகளில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு படிப்புகளையும், பயிற்சிகளையும் வழங்குகிறது.
வளாகங்கள்:
கொச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்திற்கு சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் கிளை வளாகங்கள் உள்ளன.
இளநிலை பட்டப்படிப்பு:
பி.எப்.எஸ்சி., பேச்சுலர் ஆப் பிசிரி சயின்ஸ் - நாட்டிக்கல் சயின்ஸ்கால அளவு:
4 ஆண்டுகள் - 8 செமஸ்டர்கள்வளாகம்:
கொச்சி
தகுதிகள்:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவுகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதுகின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.  
வயது வரம்பு:
அக்டோபர் 1ம் தேதி நிலவரப்படி, 17 முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:
சி.இ.டி., எனும் பொது நுழைவுத்தேர்வு மற்றும் சிறந்த கல்வி செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தேர்வு மையங்கள்:
கொச்சி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம்


இதர படிப்புகள்: 

வி.என்.சி., - வெசில் நேவிகேட்டர் கோர்ஸ் எம்.எப்.சி., - மரைன் பிட்டர் கோர்ஸ்

கால அளவு:
2 ஆண்டுகள்

வளாகம்:
கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம்கல்வித்தகுதி: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு:
ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி, 15 முதல் 20 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை:
வி.என்.சி., மற்றும் எம்.எப்.சி., படிப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு மாதம் ரூ. 20,500 மற்றும் ஒரு முறை சீருடை சலுகையாக ரூ. 2,500 வழங்கப்படுகிறது.
தேர்வு முறை:
சி.இ.டி., எனும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தேர்வு மையங்கள்:
கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா மற்றும் பாட்னா
விபரங்களுக்கு:
https://cifnet.gov.in/






      Dinamalar
      Follow us