தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அறிவோம் ஐ.ஐ.எப்.டி.,

அறிவோம் ஐ.ஐ.எப்.டி.,

அறிவோம் ஐ.ஐ.எப்.டி.,


ஜூன் 23, 2022 12:00 AM

ஜூன் 23, 2022 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 23, 2022 12:00 AM ஜூன் 23, 2022 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாட்டு வணிகம் சார்ந்த திறன்களை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கல்வி நிறுவனம், மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு’!
சர்வதேச வணிகம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான பிரத்யேக கல்வி நிறுவனமான ஐ.ஐ.எப்.டி.,க்கு 2002ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. 
கல்வி வளாகங்கள்:
புதுடில்லி, கோல்கட்டா, காகிநாடா
வழங்கப்படும் படிப்புகள்:
* எம்.ஏ., எக்னாமிக்ஸ் - டிரேடு மற்றும் பினான்ஸ் - 2 ஆண்டுகள், புதுடில்லி மற்றும் கோல்கட்டா வளாகம் * பிஎச்.டி., எக்னாமிக்ஸ், புதுடில்லி மற்றும் கோல்கட்டா* பிஎச்.டி., மேனேஜ்மெண்ட், புதுடில்லி மற்றும் கோல்கட்டா* எம்.பி.ஏ., இண்டர்நேஷனல் பிசினஸ்  - 2 ஆண்டுகள், புதுடில்லி மற்றும் கோல்கட்டா* எம்.பி.ஏ., இண்டர்நேஷனல் பிசினஸ் - 2 ஆண்டுகள் 6 மாதங்கள், புதுடில்லி மற்றும் கோல்கட்டா* ஒருங்கிணைந்த படிப்பு - பிசினஸ் அனலெடிக்ஸ் மற்றும் இண்டர்நேஷனல் பிசினஸ் 5 ஆண்டுகள், காகிநாடா வளாகம்* எக்ஸிகியூட்டிவ் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் இண்டர்நேஷனல் பிசினஸ், புதுடில்லி மற்றும் கோல்கட்டா* எக்ஸிகியூட்டிவ் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் இண்டர்நேஷனல் பிசினஸ் - ஹைபிரிட் படிப்பு, புதுடில்லி * எம்.பி.ஏ., இண்டர்நேஷனல் பிசிஅனஸ் - 2 ஆண்டுகள், தன்ஷானியா  கல்விநிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படும் படிப்பு* போஸ்ட் கிராஜூவேட் சர்ட்டிபிகேட் இன் இண்டர்நேஷனல் பிசினஸ் அண்டு பினான்ஸ் - ஹைபிரிட் படிப்பு, புதுடில்லி மற்றும் கோல்கட்டா* சர்ட்டிபிகேட் புரோகிராம் - எக்ஸ்போர்ட் இம்போர்ட் மேனேஜ்மெண்ட் 
’ஹைபிரிட்’ படிப்புகள்:
பணிபுரிந்து கொண்டு கல்வி கற்க வசதியாக, கல்வி நிறுவன வளாகம் மற்றும் ஆன்லைன் இரண்டும் இணைந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
மாணவர் பரிமாற்றம்:
ஏராளமான வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதுடன், அவற்றோடு இணைந்து 'ஸ்டூடண்ட் எக்ஸ்ஷேன்ஜ்’ சார்ந்த படிப்புகளையும் வழங்குகிறது.
சிறப்பு கருத்துரைகள்:
மேற்கண்ட படிப்புகள் தவிர கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு கருத்தரங்குகளையும் தொடர்ந்து நடத்திவருகிறது.
விபரங்களுக்கு:
www.iift.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us