sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

யுனெஸ்கோ விருது

/

யுனெஸ்கோ விருது

யுனெஸ்கோ விருது

யுனெஸ்கோ விருது


ஆக 07, 2022 12:00 AM

ஆக 07, 2022 12:00 AM

Google News

ஆக 07, 2022 12:00 AM ஆக 07, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்டெம் துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்காகவும், இளம் விஞ்ஞானிகளை ஊக்கிவிப்பதற்காகவும் யுனெஸ்கோ - அல் போசன் சர்வதேச விருது வழங்கப்படுகிறது.
அறிமுகம்
சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்ட அல் போசன் அறக்கட்டளையின் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. 
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்டெம் துறைகளில் இளம் விஞ்ஞானிகள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் உலக அளவில் சமூக - பொருளாதார மாற்றம் மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
நோக்கங்கள்:
* ஸ்டெம் பிரிவுகளில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பது* யுனெஸ்கோவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் - எஸ்.டி.ஜி.,களை சாதகமாக்கும் வகையில் சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது* சர்வதேச அளவில் சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும் இளைஞர்களை அங்கீகரிப்பது* குறிப்பாக இளம் மாணவிகள் மற்றும் பெண்கள் மத்தியில் விஞ்ஞானம், அறிவியல் ஆராய்ச்சி, பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அறிவியல் துறைகளில் அவர்களது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள ஊக்குவிப்பது.
விருது விபரம்:
* கல்வி, ஆராய்ச்சி அல்லது சமூக வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பில் 'ஸ்டெம்’ முன்னேற்றத்தை ஊக்குவித்த ஐந்து நபர்களுக்கு மட்டுமே பரிசும், விருதும் வழங்கப்படுகிறது.* தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்படுகிறது. இதன்படி, இவ்விருதிற்கான மொத்த மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். * விருது தொகை தவிர, தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.* ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐந்து பேருக்கு யுனெஸ்கோ இந்த விருது வழங்குகிறது.* 40 வயதிற்கு குறைவாக இருப்பவர்களுக்கும், விண்ணப்பிக்கும் நேரத்தில் ஸ்டெம் துறைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு:
https://unescoalfozanprize.org/






      Dinamalar
      Follow us