sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

ஆராய்ச்சியாளர்களுக்கு சர்வதேச விருது

/

ஆராய்ச்சியாளர்களுக்கு சர்வதேச விருது

ஆராய்ச்சியாளர்களுக்கு சர்வதேச விருது

ஆராய்ச்சியாளர்களுக்கு சர்வதேச விருது


அக் 09, 2022 12:00 AM

அக் 09, 2022 12:00 AM

Google News

அக் 09, 2022 12:00 AM அக் 09, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனித வாழ்விற்கு சவாலாக விளங்கும் காரணிகளில் குறிப்பாக ’லைப் சயின்சஸ்’ துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபடும் நிபுணர்களை அங்கீகரிப்பதற்காக யுனெஸ்கோ - ஈகுவடோரியல் கினீ சர்வதேச விருது வழங்கப்படுகிறது.
அறிமுகம்

தரமான மனிதவாழ்விற்கு பிரச்னைகளாக விளங்கும் சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், வறுமை, நோய் ஆகியவற்றில் நிலவும் உலகளவிலான சவால்களுக்கு தீர்வு காணும் முயற்சியாக லைப் சயின்சஸ் துறைகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க யுனெஸ்கோவால் 7வது முறையாக இவ்விருது வழங்கப்படுகிறது. 
மேலும் இவ்விருதிற்கு 3.5 லட்சம் அமெரிக்க டாலர்களை ’ரிபப்ளிக் ஆப் ஈகுவடோரியல் கினீ’ நிதி உதவி வழங்குகிறது. இந்த நிதி அதிகபட்சம் 3 ஆராய்ச்சியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்:

மனித வாழ்விற்கான தரத்தை உயர்த்தும் நோக்கில் லைப் சயின்சஸ் துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபடும் தனிநபர், நிறுவனங்கள், அரசுசார-அமைப்புகள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். குழுவாக விண்ணப்பிக்கும்பட்சத்தில் அதிகபட்சம் 4 பேர் மட்டுமே இடம்பெற வேண்டும்.
விண்ணப்பித்தல்:

தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் ஆன்லைன் வாயிலாக ஆங்கில மொழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரது பின்புலம், இவ்விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான நோக்கம், ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பணிகள் ஆகிய தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை:

உரிய தேதிக்குள் பெறப்பட்ட தகுதியுள்ள அனைத்து விண்ணப்பங்களையும் சர்வதேச நடுவர் குழுவுக்கு யுனெஸ்கோ செயலகம் அனுப்பிவைக்கும். பாரிஸ் நகரில் கூடும் சர்வதேச நடுவர் குழு விண்ணப்பங்களை ஆராயும். நடுவர் குழுவின் பரிந்துரைப்படி பொது இயக்குனர் தகுதியான நபரை அறிவிப்பார். யுனெஸ்கோவால் நடத்தப்படும் விழாவில் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கப்படும். 
விபரங்களுக்கு:
www.education.gov.in மற்றும் www.unesco.org/en/prizes/equatorial-guinea






      Dinamalar
      Follow us