தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எம்.சி.ஏ.டி.,

எம்.சி.ஏ.டி.,

எம்.சி.ஏ.டி.,


நவ 04, 2022 12:00 AM

நவ 04, 2022 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 04, 2022 12:00 AM நவ 04, 2022 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாடுகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளை படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் எழுத வேண்டிய தேர்வுகளில் ஒன்று, 'மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் டெஸ்ட் - எம்.சி.ஏ.டி.,’

முக்கியத்துவம்

ஏ.ஏ.எம்.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் 'அசோசியேஷன் ஆப் அமெரிக்கன் மெடிக்கல் காலேஜ்ஸ்’ இத்தேர்வை நடத்துகிறது. அமெரிக்காவில் செயல்படும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன.

அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மட்டும் இன்றி பல்வேறு வளர்ந்த நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களும் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
படிப்புகள்:

எம்.டி.,- டாக்டர் ஆப் மெடிசின்
டி.ஓ., - டாக்டர் ஆப் ஆஸ்டோபதிக் மெடிசின்
டி.பி.எம்., - டாக்டர் ஆப் பிசிக்கல் மெடிசின் அல்லது டாக்டர் ஆப் பொடியட்ரிக் மெடிசின்
டி.வி.எம்., - டாக்டர் ஆப் வெட்ரினரி மெடிசின்
உட்பட பல்வேறு மருத்துவ படிப்புகளுக்கு இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்  மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை:

முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலான இத்தேர்வில் 'மல்டிபில் சாய்ஸ்’ வகை கேள்விகள் மட்டுமே இடம்பெறும். பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன், தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறன் மற்றும் மருத்துவ துறைக்கு மிகவும் அவசியமான உடற்கூறு அறிவியல், உயிரியல் போன்ற பாடங்களில் உள்ள அறிவும் இத்தேர்வில் பரிசோதிக்கப்படுகிறது.

பிரிவுகள்:

1. பயோலஜிக்கல் அண்ட் பயோகெமிஸ்ட்ரி பவுண்டேஷன்ஸ் ஆப் லிவிங் சிஸ்டம்ஸ்
2. கெமிக்கல் அண்ட் பிசிக்கல் பவுண்டேஷன்ஸ் ஆப் பயோலஜிக்கல் சிஸ்டம்ஸ்
3. சைக்காலாஜிக்கல், சோசியல் அண்ட் பயோலஜிக்கல் பவுண்டேஷன்ஸ் ஆப் பிகேவியர்
4. கிரிட்டிக்கல் அனலைசிஸ் அண்ட் ரீசனிங் ஸ்கில்ஸ்
என நான்கு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

தேர்வு வரையறை:

ஒரு மாணவர் ஆண்டுக்கு 3 முறை வரை இத்தேர்வை எழுதலாம். ஆனால், இரண்டு ஆண்டுகளில் 4 முறைக்கு மேல் எழுத முடியாது. மேலும், ஒரு மாணவர் அவரது வாழ்நாளில் 7 முறைக்கும் மேல் இத்தேர்வை எழுத முடியாது. இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை தேர்வு மதிப்பெண் செல்லுபடியாகும்.

விபரங்களுக்கு: 
https://students-residents.aamc.org


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us