sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

கிளாட் 2023

/

கிளாட் 2023

கிளாட் 2023

கிளாட் 2023


நவ 04, 2022 12:00 AM

நவ 04, 2022 12:00 AM

Google News

நவ 04, 2022 12:00 AM நவ 04, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டிலுள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளை படிக்க எழுத வேண்டிய தேசிய அளவிலான பிரதான நுழைவுத்தேர்வு 'கிளாட்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘காமன் லா அட்மிஷன் டெஸ்ட்’

முக்கியத்துவம்:

22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த நுழைவுத்தேர்வை நடத்துகின்றன. சட்டத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். தேசிய அளவிலான சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை பெற இத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண் கட்டாயம். எனினும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற இத்தேர்வு மதிப்பெண் அவசியம் இல்லை.

படிப்புகள்:
5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை பட்டப்படிப்பு - எல்.எல்.பி., மற்றும் ஓர் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு - எல்.எல்.எம்.,

தகுதிகள்:


5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிற்கு, 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. மார்ச் / ஏப்ரல் 2023ல் நடைபெறும் தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஓர் ஆண்டு எல்.எல்.எம்., எனும் முதுநிலை பட்டப்படிப்பை படிப்பிற்கு, எல்.எல்.பி., அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. ஏப்ரல் / மே 2023ல் நடைபெறும் இளநிலை பட்டப்படிப்பிற்கான இறுதித்தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:


இளநிலை பட்டப்படிப்பிற்கான தேர்வில் ஆங்கிலம், பொதுஅறிவு, லீகல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், குவாண்டிடேட்டிவ் டெக்னிக்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதுநிலை பட்டப்பிடிப்பிற்கான தேர்வில் அரசியலமைப்பு சட்டம், நிர்வாக சட்டம், குடும்ப சட்டம், குற்றவியல் சட்டம், கம்பெர்னி சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், லா ஆப் கான்ட்ராக்ட் உட்பட பல்வேறு பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு ஆகிய இரண்டு தேர்வுகளும் தனித்தனியே
ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம்: 4 ஆயிரம் ரூபாய்; எஸ்.சி., எஸ்.டி., பி.பி.எல்., பிரிவினருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய்.

விபரங்களுக்கு:
https://consortiumofnlus.ac.in/







      Dinamalar
      Follow us