sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

இந்திய புள்ளியியல் நிறுவனம்

/

இந்திய புள்ளியியல் நிறுவனம்

இந்திய புள்ளியியல் நிறுவனம்

இந்திய புள்ளியியல் நிறுவனம்


மார் 20, 2023 12:00 AM

மார் 20, 2023 12:00 AM

Google News

மார் 20, 2023 12:00 AM மார் 20, 2023 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புள்ளியியல் மற்றும் அவை சார்ந்த படிப்புகளுக்காக நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்விநிறுவனம் ஐ.எஸ்.ஐ., எனப்படும் ‘இந்தியன் ஸ்டேடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்’.
முக்கியத்துவம்:
கடந்த 1931ம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், இந்திய புள்ளியியல் கல்வி நிறுவன சட்டத்தின்கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாகவும் உள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இக்கல்வி நிறுவனம் புள்ளியியல் படிப்புகளுக்கு மட்டுமின்றி, கணிதம், குவாண்டிடேட்டிவ் எக்னாமிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இதர புள்ளியியல் சார்ந்த படிப்புகளை வழங்குவதிலும் சிறப்புமிக்கது.
பயிற்சி மையங்கள்: 
கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டுள்ள இக்கல்வி நிறுவனம், பெங்களூரு, புதுடில்லி, சென்னை மற்றும் தேஷ்பூர் ஆகிய இடங்களில் பயிற்சி மையங்களைக் கொண்டுள்ளது. மேலும், ஜார்கண்ட்டில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்புகள்:
* பேச்சுலர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் - பி.ஸ்டாட்., ஹானர்ஸ்* பேச்சுலர் ஆப் மேத்மெடிக்ஸ் - பி.மேத்., ஹானர்ஸ்
முதுநிலை படிப்புகள்:
* மாஸ்டர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் - எம்.ஸ்டாட்.,* மாஸ்டர் ஆப் மேத்மெடிக்ஸ் - எம்.மேத்.,* எம்.எஸ்., இன் குவாண்டிடேடிவ் எக்னாமிக்ஸ் - எம்.எஸ்., கியூ.இ.,* எம்.எஸ்., இன் குவாலிட்டி மேனேஜ்மெண்ட் சயின்ஸ் - எம்.எஸ்., கியூ.எம்.எஸ்.,* எம்.எஸ்., இன் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் - எம்.எஸ்., எல்.ஐ.எஸ்.,* எம்.டெக்., இன் கம்பியூட்டர் சயின்ஸ் - எம்.டெக்., சி.எஸ்.,* எம்.டெக்., இன் கிரிப்டாலஜி அண்ட் செக்யூரிட்டி - எம்.டெக்., சிஆர்.எஸ்.,* எம்.டெக்., இன் குவாலிட்டி, ரிலயப்லிட்டி அண்ட் ஆபரேஷன்ஸ் ரிசர்ச் - எம்.டெக்., கியூ.ஆர்.ஓ.ஆர்.,* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் ஸ்டேடிஸ்டிக்கல் மெத்தட்ஸ் அண்டு அனலட்டிக்ஸ் * போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் அக்ரிகல்ச்சர் அண்ட் ரூரல் மெனேஜ்மெண்ட் வித் ஸ்டேடிஸ்டிக்கல் மெதட்ஸ் அண்ட் அனலடிக்ஸ் * போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் அப்ளைடு ஸ்டேடிஸ்டிக்ஸ்
ஆராய்ச்சி படிப்புகள்:
* ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்* பிஎச்.டி.,* டி.எஸ்சி., 
தகுதிகள்:
இளநிலை பட்டப்படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்தவராகவும், முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

சேர்க்கை முறை:
ஐ.எஸ்.ஐ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான பிரத்யேக தேர்வு நடத்தப்படுகிறது. அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் அட்மிஷன் நடைபெறும்.
உதவித்தொகை:
இக்கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு படிப்பிற்கு ஏற்ப மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 31 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு:
www.isical.ac.in






      Dinamalar
      Follow us