தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/விருந்தோம்பல் படிப்புகள்

விருந்தோம்பல் படிப்புகள்

விருந்தோம்பல் படிப்புகள்


ஏப் 25, 2023 12:00 AM

ஏப் 25, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 25, 2023 12:00 AM ஏப் 25, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால், நாட்டில் விருந்தோம்பல் மேலாண்மை கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 1982ம் ஆண்டு நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி - என்.சி.எச்.எம்.சி.டி., என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 
விருந்தோம்பல் துறை சார்ந்த கல்வி மற்றும் பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை என்.சி.எச்.எம்.சி.டி., மேற்கொள்வதோடு,  பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் துறைகளில் பல்வேறு படிப்புகளையும் வழங்குகிறது. 

வழங்கப்படும் படிப்புகள்:


முதுநிலை படிப்புகள்:
எம்.எஸ்சி., இன் ஹாஸ்ப்பிட்டாலிட்டி அட்மினிஸ்ட்ரேசன்போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் டயட்டிக்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் புட் சர்வீஸ்போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் அக்கமொடேஷன் ஆப்ரேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட்
இளநிலை பட்டப்படிப்பு: 
பி.எஸ்சி., இன் ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேசன்
டிப்ளமா படிப்புகள்:
டிப்ளமா இன் புட் புரொடக்‌ஷன்டிப்ளமா இன் புட் அண்ட் பிரவரேஜ் சர்வீஸ்டிப்ளமா இன் பேக்கரி அண்டு கன்பெக்சனரிடிப்ளமா இன் பிரண்ட் ஆபீஸ் ஆப்ரேஷன்டிப்ளமா இன் ஹவுஸ்கீப்பிங் ஆப்ரேஷன்
சான்றிதழ் படிப்புகள்:
கிராப்ட்ஸ்மென்ஷிப் சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் புட் புரொடக்‌ஷன் கிராப்ட்ஸ்மென்ஷிப் சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் புட் அண்ட் பிவரேஜ் சர்வீஸ்
கல்வி நிறுவனங்கள்:
இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து என்.சி.எச்.எம்.சி.டி., சில படிப்புகளை வழங்குகிறது. மேலும், நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்படும் 'இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்’ கல்வி நிறுவனங்களால் இத்துறை சார்ந்த பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சேர்க்கை முறை:
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட ’நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’, ’நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் - ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்‌ஷாமினேஷன்- என்.சி.எச்.எம்., ஜே.இ.இ.,’ தேர்வை முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலாக நடத்துகிறது. என்.சி.எச்.எம்.சி.டி., இணைப்பு பெற்ற கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை என்.சி.எச்.எம்., - ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு வாயிலாக நடைபெறுகிறது. எம்.எஸ்சி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எம்.எஸ்சி., - ஜே.இ.இ., தேர்வு வாயிலாக நடைபெறுகிறது.
விபரங்களுக்கு:
http://nchm.nic.in/ , https://nchmjee.nta.nic.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us