தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ரோபாட்டிக்ஸ் இன்ஜினியரிங்

ரோபாட்டிக்ஸ் இன்ஜினியரிங்

ரோபாட்டிக்ஸ் இன்ஜினியரிங்


ஜூன் 19, 2023 12:00 AM

ஜூன் 19, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 19, 2023 12:00 AM ஜூன் 19, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளின் பயன்பாட்டைக் கொண்ட, 'ரோபாட்டிக்ஸ் இன்ஜினியரிங்’ ஒரு பிரத்யேக துறையாகவும் வளர்ந்துள்ளது.

முக்கியத்துவம்:


இத்துறையில், ரோபோக்களை வடிவமைத்தல், ரோபோக்களை உருவாக்குதல், கட்டமைத்தல், சோதனை செய்தல், மேம்படுத்துதல், நிறுவுதல், இயக்குதல், பராமரித்தல் போன்ற பல்வேறு நிலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, ரோபோ இயந்திரங்கள் பாதுகாப்பாகவும், நம்பகமானதாகவும், துல்லியமாகவும் செயல்படும் வகையில் உரிய பணிகளை இத்துறை வல்லுனர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பாடத்திட்டம்:


ரோபாட்டிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில், தெர்மோ டயனமிக்ஸ், மெக்கானிக்ஸ், மெக்கானிக்கல் டிசைன், எலக்ட்ரிக்கல், சிமுலேஷன் புராசசிங் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. தேசிய அளவில் 250க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

தேவைப்படும் திறன்கள்:


* கணிதம், அறிவியல் மற்றும் பொறியியல் அறிவைப் பயன்படுத்துவதற்கான திறன்
* மின்சாரம், மின்னணுவியல் மற்றும் இயந்திரக் கூறுகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்தும் திறன்
* ரோபோ கட்டுப்பாட்டுடன் தானியங்கி உற்பத்தி செல்களை வடிவமைக்கும் திறன்
* உலோக எந்திரம் மற்றும் மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பைப் புரிந்துகொள்ளும் திறன்; உற்பத்தி செய்முறை
* ஆட்டோமேஷன் தயாரிப்புகளின் அம்சங்களையும் செயல்பாட்டையும் புரிந்து கொள்ளும் திறன்
* திறம்பட தொடர்பு கொள்ளும் திறன்

வேலை வாய்ப்புகள்:


ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் பல்வேறு தொழிற்சாலைகளிலும் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களிலும் பயன்படுகிறது. குறிப்பாக, உதிரிபாகங்கள் உற்பத்தி, வாகன உற்பத்தி, சக்தி மற்றும் ஆற்றல் தொழில்துறை, பாதுகாப்பு துறை, எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்துறை, வேளாண்மை, மருத்துவம் என பல்வேறு துறைகளில் ரோபாட்டிக்ஸ் படிப்பிற்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.

இஸ்ரோ, பெல் உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்களிலும், கம்ப்யூட்டர், கார் மற்றும் ட்ரோன் தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் துறை நிறுவனங்களிலும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சுயதொழில் புரியவும் வளமான வாய்ப்பு உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us