ஜூலை 28, 2023 12:00 AM
ஜூலை 28, 2023 12:00 AM
அ நிறம் | அளவு
ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் - ஏ.ஐ., வெற்றிகரமாக பயன்படுத்துவதன் வாயிலாக, இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சியில் 1.4 சதவீத புள்ளிகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் மற்றும் போஸ்டன் கன்சல்டிங் குரூப் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தற்போது 4.5 சதவீத ஏ.ஐ., நிபுணர்களே உள்ளனர். இன்னும் அதிக நிபுணர்கள் தேவைப்படும் நிலையில், போதிய திறன் வாய்ந்தவர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.
ஐ.டி., நிறுவனங்களே அதிகளவிலான திறனாளர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்தாலும், ஏ.ஐ., திறனாளர்களை கண்டறிவதில் அவை தொடர்ந்து போராடி வருவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
