தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கேட் 2023

கேட் 2023

கேட் 2023


ஆக 16, 2023 12:00 AM

ஆக 16, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 16, 2023 12:00 AM ஆக 16, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஐ.எம்., உட்பட நாட்டிலுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் மேலாண்மை பட்டப்படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் எழுத வேண்டிய தேர்வு, காமன் அட்மிஷன் டெஸ்ட். 
அறிமுகம்
ஒரு மதிப்புமிக்க தேசிய அளவிலான மேலாண்மை நுழைவுத் தேர்வான 'கேட்’ மதிப்பெண் அடிப்படையில், 20 ஐ.ஐ.எம்.,கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பி-ஸ்கூல்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஐ.ஐ.எம்., லக்னோ இந்த ஆண்டு தேர்வை நடத்துகிறது. 
படிப்புகள்:
எம்.பி.ஏ., பி.ஜி.பி., இ-பி.ஜி.டி.-ஏ.பி.ஏ., எம்.எஸ்சி.,-டேட்டா சயின்ஸ், இ.பி.ஜி.டி.எஸ்.எம்., பி.ஜி.பி.இ.எக்ஸ்., பி.ஜி.பி.எக்ஸ்., இ.எம்.பி.ஏ., பி.ஜி.பி.எம்., பி.ஜி.பி.டி.ஜி.எம்., பிஎச்.டி., உட்பட பல்வேறு படிப்புகள்
தேர்வு முறை:
பிரிவு 1: வெர்பல் எபிலிட்டி மற்றும் ரீடிங் காம்ப்ரிஹென்ஷன்பிரிவு 2: டேட்டா இன்டர்பிரிடேஷன் மற்றும் லாஜிக்கல் ரீசனிங்பிரிவு 3: குவாண்டிடேட்டிவ் எபிலிட்டி
என மூன்று பிரிவுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு தலா 40 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மூன்று அமர்வுகளுக்கு மொத்தம் 120 நிமிடங்கள் வழங்கப்படும். ஒரு பிரிவில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பகுதிக்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
கேட் தேர்விற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு மையம்:
நாடு முழுவதிலும் மொத்தம் 155 நகரங்களில் தேர்வு மையங்க்கள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாணவரும் விருப்பமான 6 நகரங்களை பரிந்துரைக்க வேண்டும். 
விபரங்களுக்கு:
www.iimcat.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us