sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

கிராமப்புற மேலாண்மை படிப்புகள்

/

கிராமப்புற மேலாண்மை படிப்புகள்

கிராமப்புற மேலாண்மை படிப்புகள்

கிராமப்புற மேலாண்மை படிப்புகள்


ஆக 24, 2023 12:00 AM

ஆக 24, 2023 12:00 AM

Google News

ஆக 24, 2023 12:00 AM ஆக 24, 2023 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், ஹைதராபாத்தில் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் செயல்படுகிறது.
வழங்கப்படும் படிப்புகள்:
* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் ரூரல் டெவெலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.ஆர்.எம்.,) - ஓர் ஆண்டு* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் - ரூரல் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.எம்.,-ஆர்.எம்.,) - 2 ஆண்டுகள்
தகுதிகள்:
பி.ஜி.டி.ஆர்.எம்., படிப்பில் சேர்க்கை பெற ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
பி.ஜி.டி.எம்.,-ஆர்.எம்., படிப்பில் சேர்க்கை பெற ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் கேட், சேட், சிமேட், ஏ.டி.எம்.ஏ., ஜிமேட் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் போதிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை:
http://admissions.nirdpr.org.in/regular/login.aspx எனும் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
இளநிலை பட்டப்படிப்பு அல்லது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அழைக்கப்படும் மாணவர்கள், குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
கல்விக் கட்டணம்:
ஆண்டுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். விடுதி மற்றும் இதர கட்டணம் தனி.
உதவித்தொகை:
கல்வியில் சிறந்து விளங்கும் சில மாணவர்களுக்கு என்.ஐ.ஆர்.டி.பி.ஆர்., உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு:
http://nirdpr.org.in/






      Dinamalar
      Follow us