தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தமிழ் படிப்புகள்

தமிழ் படிப்புகள்

தமிழ் படிப்புகள்


செப் 01, 2023 12:00 AM

செப் 01, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 01, 2023 12:00 AM செப் 01, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சில முதுநிலை தமிழ் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
வழங்கப்படும் படிப்புகள்:

தமிழ் முதுநிலை பட்டப்படிப்பு - எம்.ஏ., தமிழ் சேர்க்கை இடங்கள்:
14
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலை பட்டப்படிப்பு - இன்டெக்ரேட்டர்டு எம்.ஏ., தமிழ்சேர்க்கை இடங்கள்:
40
கல்வித் தகுதிகள்:
எம்.ஏ., தமிழ் படிப்பில் சேர்க்கை பெற, உயர்கல்வி துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றில் மொழிப் பாடமாக தமிழ் படித்திருப்பது அவசியம். தற்போது இறுதி ஆண்டு தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். எனினும், ஒட்டுமொத்த தேர்ச்சி மதிப்பெண் பட்டியலின்படியே சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது. 
ஒருங்கிணைந்த எம்.ஏ., தமிழ் படிப்பில் சேர்க்கை பெற, பள்ளிக் கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொழி பாடமாக தமிழ் படித்திருப்பது அவசியம். இப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணவர்கள் மூன்றாண்டு இறுதியில், விருப்பத்தின் அடிப்படையில் இளநிலை பட்டத்துடன் வெளியேறும் வாய்ப்பு உண்டு.

வயது வரம்பு:
எம்.ஏ., தமிழ் படிப்பில் சேர, 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர, 21 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.
விபரங்களுக்கு: https://www.ulakaththamizh.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us