தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஜாம் தேர்வு

ஜாம் தேர்வு

ஜாம் தேர்வு


செப் 25, 2023 12:00 AM

செப் 25, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 25, 2023 12:00 AM செப் 25, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டில் உள்ள முன்னணி மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும், முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற, ஜாயிண்ட் அட்மிஷன் டெஸ்ட் - ஜாம் எனும் தேர்வை எழுதுவது முக்கியம்.

அறிமுகம்
கடந்த 2004-05ம் ஆண்டில் துவங்கப்பட்ட இத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்கள் பொறுப்பேற்று நடத்தும். இந்த ஆண்டு பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் - ஐ.ஐ.எஸ்சி மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் - ஐ.ஐ.டி., இணைந்து இத்தேர்வை நடத்துகின்றன.
படிப்புகள்:
எம்.எஸ்சி., எம்.எஸ்சி., -டெக்.,எம்.எஸ்., - ரிசர்ச்எம்.எஸ்சி., - எம்.டெக்., இரட்டை பட்டப்படிப்புஎம்.எஸ்சி., - பிஎச்.டி., ஒருங்கிணைந்த படிப்புஎம்.எஸ்சி., - பிஎச்.டி., - இரட்டை பட்டப்படிப்பு
யார் எழுதலாம்:
இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தற்போது இளநிலை பட்டப் படிப்பின் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்க வேண்டும். சுமார் 3 ஆயிரம் இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்காக நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை, உள்நாட்டை சேர்ந்த தகுதிவாய்ந்த பட்டதாரிகள் மட்டுமின்றி, இந்தியாவில் பட்டம் பெற்ற வெளிநாட்டு மாணவர்களும் எழுதலாம். 
தேர்வு முறை:
சி.பி.டி., எனும்  கணினி அடிப்படையிலான இத்தேர்வு உயிரி தொழில்நுட்பம், வேதியியல், பொருளாதாரம், புவியியல், கணித புள்ளியியல், கணிதம், இயற்பியல் ஆகிய ஏழு பாடங்களில் நடத்தப்படுகிறது. மூன்று பிரிவுகளில் மொத்தம் 60 கேள்விகள் கேட்கப்படும். அதாவது ஏ, பி மற்றும் சி என மூன்று பிரிவுகள் இருக்கும். 
ஏ பிரிவில் 30 எம்.சி.கியூ. கேள்விகளும், பி பிரிவில் 10 எம்.எஸ்.கியூ. கேள்விகளும், சி பிரிவில் 20 என்.ஏ.டி. கேள்விகளும் இடம்பெறும். தேர்வு எழுதும் நேரம் 180 நிமிடங்கள். மொத்த மதிப்பெண் 100. தேர்வை ஆங்கிலத்திம் மட்டுமே எழுத வேண்டும். மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசின் விதிமுறைப்படி, இட ஒதுக்கீடு உண்டு.
தேர்வு மையங்கள்:
இத்தேர்வு நாடு முழுவதிலும் 100 நகரங்களுக்கு மேல் நடத்தப்படுகிறது.  
விபரங்களுக்கு:
https://jam.iitm.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us