sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சி.எஸ்.ஐ.ஆர்.-யு.ஜி.சி., நெட் தேர்வு

சி.எஸ்.ஐ.ஆர்.-யு.ஜி.சி., நெட் தேர்வு

சி.எஸ்.ஐ.ஆர்.-யு.ஜி.சி., நெட் தேர்வு


நவ 13, 2023 12:00 AM

நவ 13, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 13, 2023 12:00 AM நவ 13, 2023 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பாக, ஜாயிண்ட் சி.எஸ்.ஐ.ஆர்.-யு.ஜி.சி., நெட் தேர்வை என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
முக்கியத்துவம்
இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இளம் ஆராய்ச்சி உதவித்தொகை - ஜே.ஆர்.எப்., பெறுவதோடு மட்டுமல்லாமல், இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துணை பேராசிரியர் ஆக பணிபுரியும் தகுதியையும் பெறுகின்றனர்.
தேர்வு தாள்கள்:
கெமிக்கல் சயின்சஸ்எர்த், அட்மாஸ்பெரிக், ஓசன் மற்றும் பிளானெடரி சயின்சஸ்லைப் சயின்சஸ்மேத்மெடிக்கல் சயின்சஸ் பிசிக்கல் சயின்சஸ்ஆகிய பாடங்களில் நடைபெறும் இத்தேர்வில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு நேரம்:
180 நிமிடங்கள்
தேர்வு நடைபெறும் முறை:
முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
வயதுவரம்பு:
ஜே.ஆர்.எப்., உதவித்தொகை பெற, 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. இதர பிறபடுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
உதவி பேராசிரியர் தகுதியை மட்டுமே எதிர்நோக்குபவர்களுக்கு எந்த உச்ச வயதுவரம்பும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
https://csirnet.ntaonline.in/ எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விபரங்களுக்கு:
www.nta.ac.in மற்றும் https://csirnet.nta.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us