sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

ரோபோடிக்ஸ் - துறை அறிமுகம்

/

ரோபோடிக்ஸ் - துறை அறிமுகம்

ரோபோடிக்ஸ் - துறை அறிமுகம்

ரோபோடிக்ஸ் - துறை அறிமுகம்


ஜன 04, 2009 12:00 AM

ஜன 04, 2009 12:00 AM

Google News

ஜன 04, 2009 12:00 AM ஜன 04, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோபோடிக்ஸ் என்ற வார்த்தையைப் பற்றி அறியுமுன் ரோபோ என்ற வார்த்தையின் பொருளை அறிவது முக்கியம். ரோபோ எனப்படுவது கட்டுப்படுத்தப்பட்ட, தானாக இயங்கக் கூடிய, மறுபடி மறுபடி புரொகிராம்களை மாற்றத்தக்க பல வகை பயன்பாடு கொண்ட இயந்திரமாகும்.

இந்த இயந்திரங்கள் தொழிலரங்குகளில் தானாகவே செயல்படும் பயன்பாடுகளுக்கு பெரிதும் உபயோகப்படுகின்றன. ரோபோக்களின் உள்ளார்ந்த தன்மையின் காரணமாக தற்போது உலகெங்கும் பிரசித்தி பெற்று இவை விளங்குகின்றன. மிகவும் அபாயகரமான சூழலிலும் ரோபோக்கள் துல்லியமாகவும், மீண்டும் மீண்டும் இயங்கும் தன்மையைப் பெற்றிருப்பதால் அவை முக்கியமான பணிகளைச் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

ரோபோக்களை வடிவமைப்பது, பராமரிப்பது, புதிய பயன்பாடுகளை உருவாக்குவது, ஆய்வுகளில் ஈடுபடுவது போன்றவற்றுடன் தொடர்புடைய துறையே ரோபோடிக்ஸ் துறை. ரோபோக்களை கம்ப்யூட்டர்களின் உதவியோடு கட்டுப்படுத்துவது, தகவல் பெறுவது, தகவலை பயன்படுத்துவது போன்றவற்றுடன் தொடர்புடைய பொறியியலின் ஒரு பிரிவாக இது உள்ளது. ரோபோ அமைப்புகள் மானிபுலேட்டர், ரோபோ கைகள், இயங்கும் ரோபோக்கள், நடக்கும் ரோபோக்கள், ஊனமுற்றோருக்கு உதவுவது, டெலிரோபோக்கள், மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் அமைப்புகள் என்று பல வகை ரோபோக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. 

அடிப்படைக் கல்வி என்ன?
ரோபோடிக்ஸ் துறையில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பல பிரிவுகளின் பயன்பாடுகள் செயல்படுத்தப்படுவதால் துறையில் இணைய விரும்புபவர்களுக்கு இன்ஜினியரிங் பின்புலமும் திறனும் இருக்க வேண்டும்.

தகுதி என்ன?
ஏற்கனவே கூறியது போல இத் துறையில் சிறப்பாக மிளிர, சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் திறன்கள் அவசியமாக தேவைப்படுகிறது. கம்ப்யூட்டர், ஐ.டி., மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் ஆகியவற்றில் ஒன்றில் பி.டெக்., பி.இ., படித்திருப்பது பொருத்தமான தகுதியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 7 ஐ.ஐ.டி.,க்களிலும் பல இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் ரோபோடிக்ஸ் மற்றும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பணி வாய்ப்புகள்
ரோபோடிக்ஸ் துறையானது வேகமாக வளர்ந்து வரும் நவீன அறிவியல் துறையாகும். எனவே இது அபரிமிதமான பணி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. தற்சமயம் இப்படிப்புகளை முடித்தவர்கள் தொழிற் சாலைகளுக்குத் தேவையான ரோபோக்களை தயாரிப்பது மற்றும் தேவைக்கேற்ப பணி புரியும் ரோபோக்களை வடிவமைப்பது ஆகிய பணிகளைச் செய்கிறார்கள். வெடிகுண்டுகளை அகற்றும் ரோபோக்கள், வீடுகளில் உபயோகப்படும் வாக்வம் கிளீனர்கள் போன்றவை ரோபோக்களின் வகையைச் சேர்ந்த மாறுபட்ட வடிவங்களாகும். ரோபோக்களைப் பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலமாக புதிய புதிய ரோபோ பயன்பாடுகளை உருவாக்கி எதிர்காலத்தை வளமாக்க பல்வேறு வாய்ப்புகளும் இருக்கின்றன.

சம்பளம் எப்படி?
இந்தியாவில் ரோபோடிக்ஸ் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது. இத் துறை இந்தியாவில் அசுர வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இத் துறையில் கணிசமான சம்பளம் பெறலாம். இத் துறையில் இணைபவர்கள் துவக்கத்திலேயே மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம். பொதுவாக இத் துறையில் படித்து முடித்தவர்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் மிக நல்ல சம்பளத்தைத் தருகின்றன.

எங்கு படிக்கலாம்?
டில்லி, மும்பை, கான்பூர், சென்னை, கவுகாத்தி, காரக்பூர் மற்றும் ரூர்க்கியிலுள்ள ஐ.ஐ.டி., க்கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐதராபாத் பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இத் துறைப் படிப்புகளைப் படிக்கலாம்.






      Dinamalar
      Follow us