/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஐ.டி., துறையில் வேலை மட்டுமல்ல... திருமணமும் தடுமாற்றம்
/
ஐ.டி., துறையில் வேலை மட்டுமல்ல... திருமணமும் தடுமாற்றம்
ஐ.டி., துறையில் வேலை மட்டுமல்ல... திருமணமும் தடுமாற்றம்
ஐ.டி., துறையில் வேலை மட்டுமல்ல... திருமணமும் தடுமாற்றம்
ஜன 04, 2009 12:00 AM
ஜன 04, 2009 12:00 AM
தற்போது நிலவும் உலக அளவிலான பொருளாதார மந்த நிலையால் நமது டெக்னாலஜிஸ்டுகள் வேலைகளை இழப்பது மட்டுமல்லாமல் திருமணத்திற்கான பெண்களையும் இழக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
ஐ.டி., துறை உறுதியில்லாத எதிர்காலத்தை சந்திப்பதாகப் பெண்களின் பெற்றோர் கருதுவதால் ஐ.டி., துறையினருக்கு தங்களது மகளை திருமணம் செய்து கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். சிவில் சர்விசஸ், ஆசிரியர் பணி, ஆய்வு மற்றும் கண்டு பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதில் இவர்களுக்கு புதிதாக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையானது ஆந்திரா, குர்கான் மற்றும் புனே ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது போலவே வெளிநாடுகளில் பணி புரியும் இளைஞர்களுக்கான கிராக்கியும் குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார நிலையும் அங்கே சமீபத்தில் நிகழ்ந்த இந்திய இனத்தவரின் தற்கொலைகளும் இதற்குக் காரணமாகக் காட்டப்படுகிறது.