sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

தொழில் முறை தகவல் பரிமாற்ற படிப்புகள்

/

தொழில் முறை தகவல் பரிமாற்ற படிப்புகள்

தொழில் முறை தகவல் பரிமாற்ற படிப்புகள்

தொழில் முறை தகவல் பரிமாற்ற படிப்புகள்


ஜன 10, 2009 12:00 AM

ஜன 10, 2009 12:00 AM

Google News

ஜன 10, 2009 12:00 AM ஜன 10, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசியாவில் தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்சாலைகளின் தகவல் பரிமாற்றத் தேவைகளை நிறைவேற்றுவதில் The Writers Block  என்னும் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றப் பயிற்சி மையம் சிறந்து விளங்குகிறது.   உலகளாவிய நிறுவனங்களுக்கு தொழில் முறை தகவல் பரிமாற்றம் மற்றும் வெளியிடும் சேவைகளை இது அவுட்சோர்சிங் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சேவைகள் ஐ.டி., டெக்னாலஜி புராடக்ட் மற்றும் அவுட்சோர்சிங், ஐ.டி.இ.எஸ்., நிதி, ஏரோஸ்பேஸ், ராணுவம், கப்பல் கட்டும் தொழில், உற்பத்தி போன்ற பல துறைகளிலும் பயன்படுகிறது. இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்த நிறுவனமானது, இந்தியாவில் முதன்முதலாக பட்டமேற்படிப்புகளை தொழில்முறை தகவல் பரிமாற்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

எந்தவொரு தொழிலின் வெற்றியையும் தீர்மானிக்க தொழில் முறை தகவல்பரிமாற்றம் அத்தியாவசியமானதாக மாறிவரும் சூழலில் அதன் தேவைக்கேற்ப அறிமுகப்படுத்தப்படும் இந்த படிப்புகள் மிகவும் பயன்தரும் என்று நம்பப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் நிறைவு செய்யத் தவறிய வெற்றிடங்களை இந்த படிப்புகள் முழுமை செய்யும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த படிப்புகள் மிக மிக வரவேற்பு பெற்று விளங்கும் நிலையில் இந்தியாவிலும் இது பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

3 செமஸ்டர்களாக நடத்தப்படும் பி.ஜி.டி.டி.சி., படிப்புகளை ஒரு ஆண்டில் படிக்கலாம். தற்போது 25 இடங்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த படிப்புகளை முடிப்பவர்களுக்கு உறுதியான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.3.8லட்சம் வரை துவக்கத்திலேயே சம்பளமாகப் பெற முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது. நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாகத் தான் இதில் சேரலாம்.

இந்த படிப்புகள், கட்டணங்கள் பற்றிய முழு விபரங்களை http://twb/edu/in  www.twb.in பார்த்துக் கொள்ளலாம்.

விரைவிலேயே சாப்ட்வேர், ஐ.டி., இ-லேர்னிங், இன்ஸ்ட்ரக்சனல் டிரெய்னிங், டெலிகாம், ஏரோஸ்பேஸ், ராணுவச் சேவை, உற்பத்தி, ஆட்டோமொபைல், பப்ளிஷிங், டிஜிட்டல்மீடியா ஆகிய துறைகளில் பணியாற்ற ஒரு லட்சம் தொழில் முறை தகவல் பரிமாற்ற வல்லுனர்களுக்கான தேவையிருப்பதால் இந்த படிப்புகளை மேற்கொள்வது மிகச் சிறப்பான எதிர்கால வாய்ப்புகளைத் தரும் என்று நம்பப்படுகிறது.

தொடர்பு முகவரி:
The Writers Block,
#421 B Wing Carlton Towers,
Airport Road,
Bangalore 560 008.






      Dinamalar
      Follow us