/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
புதியவர்களுக்கு இனிக்குமா புத்தாண்டு
/
புதியவர்களுக்கு இனிக்குமா புத்தாண்டு
ஜன 10, 2009 12:00 AM
ஜன 10, 2009 12:00 AM
ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் தற்போதைய பொருளாதாரச் சூழலில் எப்போதுமே கடுமையான டிமாண்ட் உள்ளவர்களாக இருப்பதை அறிவோம்.
எனினும் புதிதாக படிப்புகளை முடித்து விட்டு வருபவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிக வாய்ப்புகளைப் பெற்று வந்ததையும் பார்த்து வந்துள்ளோம். ஆனால் 2009ம் ஆண்டானது புதியவர்களுக்கு இனிப்பான ஆண்டாக அமையாது என்றே கருதப்படுகிறது.
கடுமையான பொருளாதாரச் சூழலால் இந்த ஆண்டில் சம்பளக் குறைப்பு மற்றும் பணிக் குறைப்பு ஆகியவை வேலை மார்க்கெட்டின் அம்சங்களாக இருக்கும் என்பதால் புதியவர்கள் அடுத்த சில மாதங்களுக்குக் கடுமையான வேலைச் சூழலையே சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூக்கள் மூலமாக குறைந்த எண்ணிக்கையிலேயே நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இன்போசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ போன்ற நிறுவனங்கள் ஆட்களை எடுப்பது குறையவுள்ளது.
சத்யம் நிறுவனம் செயல்படுவதே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. எனினும் இன்சூரன்ஸ்,. ஹெல்த்கேர் சப்போர்ட், ரீடெயில் மற்றும் கல்வித் துறைகளில் ஆள் பற்றாக்குறை காணப்படும்.