sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

துறை அறிமுகம்: புவியியல்

/

துறை அறிமுகம்: புவியியல்

துறை அறிமுகம்: புவியியல்

துறை அறிமுகம்: புவியியல்


ஜன 25, 2009 12:00 AM

ஜன 25, 2009 12:00 AM

Google News

ஜன 25, 2009 12:00 AM ஜன 25, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜியாக்ரபி (புவியியல்) என்ற வார்த்தையானது கிரேக்க மொழியின் ஜியோ என்னும் வார்த்தையிலிருந்து உருவானது. இதன் பொருள் பூமி என்பதாகும்.

பூமியைப் பற்றிய அறிவியலின் பிரிவே புவியியல் எனப்படுகிறது. பூமியின் மேற்பரப்பு, இடம், இடத்தைப் பொறுத்த இயற்கை மற்றும் கலாசார அம்சங்கள், இடங்களின் அமைப்பை உச்சியிலிருந்து கூறுதல், இந்த அம்சங்களைப் பொறுத்து மனிதர்களின் மக்கள் தொகை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதாக புவியியல் அறியப்படுகிறது.

தகுதி: புவியியல் துறையைத் தேர்ந்தெடுக்க பிளஸ் 2வில் புவியியல் உள்ளிட்ட சமூக அறிவியல் படித்து நல்ல மதிப்பெண்கைளப் பெற்றிருக்க வேண்டும். நல்ல கல்வி நிறுவனங்களில் புவியியலில் பட்டப்படிப்பு படிக்க நுழைவுத் தேர்வு எழுத வேண்டியிருக்கும்.

இத்தேர்வில் மாணவர்களின் புவியியல் திறனை சோதிக்கும் கேள்விகள் இடம் பெறுகின்றன. புவியியலில் பட்டமேற்படிப்புப் படிக்க புவியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இத்துறையின் முதல் நிலையில் பிறரிடம் இருந்து கற்றுக் கொள்ளும் திறமை கட்டாயத் தேவையாகக் கருதப்படுகிறது.

இத்துறையில் இணைய விரும்புபவர்களுக்கு உருவாக்க மற்றும் கற்பனைத் திறன்கள் அவசியம் தேவைப்படுகிறது. உள்ளார்ந்த திறன், அர்ப்பணிப்பு உணர்வு, உருவாக்கும் திறமை, வண்ணங்களைப் பயன்படுத்தும் திறன், கிரியாசக்தி மற்றும் சுய சிந்தனை போன்ற குணங்கள் வெற்றிக்கான தேவைகளாக உள்ளன.

பணி வாய்ப்புகள்: புவியியலில் பல்வேறு சிறப்பு உட்பிரிவுகள் உள்ளன. இதனால் பின்வரும் பிரிவுகளில் பணிபுரிய ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.

கார்ட்டோகிராபி வரைபடங்கள், சார்ட்கள், உலகஉருண்டைகள் மற்றும் மாதிரிகளை உருவாக்கும் புவியியலாளர்கள் கார்ட்டோகிராபர் என அழைக்கப்படுகிறார்கள்.

கள ஆய்வு (சர்வே): இந்திய அரசு நடத்தும் கள ஆய்வுகள், மாநில அரசின் களப்பணித் துறைகள், தனியார் நிறுவனங்களின் கள ஆய்வுப் பணிகள் போன்றவற்றில் புவியியலாளர்கள் ஈடுபடலாம். களப்பணி மற்றும் கணித உதவியுடன் சர்வேயர்கள் புவியின் மேற்பரப்பை ஆய்வு செய்து வரைகிறார்கள்.

நகர்ப்புற மற்றும் மண்டல திட்டமிடல்: இப்பணிகளில் ஈடுபட புவியியலில் பட்டம் அல்லது பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். நில அளவையின் இருப்பிடம் மற்றும் தன்மையைப் பொறுத்து திட்டமிடல், வீடுகட்டும் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை உருவாக்குவது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். இதில் பட்டப் படிப்புகளும் உள்ளன.

நகர்ப்புற திட்டமிடல்: இப்பணிகளில் ஈடுபட புவியியலில் பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மாதிரியில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியலாம். நகர்ப்புற திட்டமிடலில் பட்ட மேற்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளை பல பல்கலைக்கழகங்கள் நடத்துகின்றன.

ரிமோட் சென்சிங்: திடீரென ஏற்படும் வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ போன்றவற்றை அறிய முயலுவதை ரிமோட் சென்சிங் எனக் கூறுகிறார்கள். புவியின் மேற்பரப்பில் ஏற்படும் இது போன்ற திடீர் மாற்றங்களை ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள்கள் மூலமாக புவியியலாளர்கள் அறிகிறார்கள்.

புவியியலின் துறையைப் பொறுத்து வன மேலாளர்கள், விவசாய அல்லது பொருளாதார கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் டெமோகிராபர்கள் போன்ற பணிகள் கிடைக்கும். புவியியல் படித்தவர்களுக்கு சுற்றுலா, சுற்றுலா இதழியல் போன்ற துறைகளில் முன்னுரிமை தரப்படுகிறது. புவியியல் பாடங்களைப் படிப்பது, போட்டித் தேர்வுகள் மற்றும் பொது அறிவுத் தேர்வுகளை எழுதுவதிலும் பயன்தருவதாக உள்ளது.

புவியியல் துறையில் பணிகள் பலவிதமாகப் பிரிந்து இருப்பதால் ஊதிய விகிதங்களும் துறையைப் பொறுத்து மாறுபடுகிறது. ஐ.டி., துறை போல துவக்க சம்பளம் அதிகமில்லையென்றாலும் நிலையான ஊதியம் தரும் துறைகளுள் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.






      Dinamalar
      Follow us