/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இன்டர்வியூக்கு போறீங்களா? ‘பாடி-லாங்வேஜ்ல’ கவனமாயிருங்க...!
/
இன்டர்வியூக்கு போறீங்களா? ‘பாடி-லாங்வேஜ்ல’ கவனமாயிருங்க...!
இன்டர்வியூக்கு போறீங்களா? ‘பாடி-லாங்வேஜ்ல’ கவனமாயிருங்க...!
இன்டர்வியூக்கு போறீங்களா? ‘பாடி-லாங்வேஜ்ல’ கவனமாயிருங்க...!
பிப் 01, 2009 12:00 AM
பிப் 01, 2009 12:00 AM
‘இன்டர்வியூ’வுக்கு போறீங்களா? ஒரு விதமான பயம் இருக்குமே? எத்தனை போட்டித் தேர்வுகள் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால், ‘இன்டர்வியூ’ என்றால் கொஞ்சம் பயம் தான்!
இந்த பயம் காரணமாக, நமக்கு தெரிந்த விஷயங்கள் கூட, சில நேரங்களில் மறந்து விடும். விஷயங்கள் தெரிந்திருப்பதை விட, அவற்றை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதில் தான் வெற்றிக்கான அடிப்படையே உள்ளது.
அப்படி, நமக்கு தெரிந்த விஷயங்களை வெளிப்படுத்துவதில், ‘பாடி-லாங்வேஜ்’ எனப்படும், உடல் வெளிப்படுத்தும் குணங்கள் முக்கியமான இடத்தை பிடிக்கின்றன. சிறப்பான, ‘பாடி லாங்வேஜ்’ தொடர்பாக சில தகவல்கள் இதோ உங்களுக்காக...
* இன்டர்வியூ அறையில், நேர்முகக் குழுவினரைக் கண்டதும், புன்னகையுடன், ‘குட்மார்னிங், குட்ஆப்டர்நூன், குட்ஈவினிங்’ போன்ற முதல் வணக்கத்தை தெரிவியுங்கள். உங்கள் புன்னகை இயல்பாக இருக்க வேண்டும். குழுவினர் கை குலுக்கினால், அழுத்தமான மற்றும் உறுதியான கை குலுக்கலாக உங்களுடையதை வைத்துக் கொள்ள வேண்டும்.
* அமரச் சொல்லும் வரை காத்திருங்கள். அவர்கள் அமரச் சொன்னதும், நன்றி கூறி அமருங்கள்.
* தளர்வாக உட்காருவது அவசியம். எனினும், நீங்கள் அமரும் விதம், நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். <உங்களது கைகளை இருக்கையின் கைப்பிடியில் வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லாத போது, உங்களது இடுப்பின் மேல் இருப்பது போல அவற்றை வைத்துக் கொள்ளலாம். உங்களது கால்கள் தரையில் நன்றாகப் பதியும் வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வுக் குழுவினரை நோக்கி, லேசாக முன்புறம் நீங்கள் சாயலாம். ஆனால், இதில், கவனம் தேவை. நன்றாக நிமிர்ந்து உட்காருவதே நல்லது.
* கால்களை குறுக்காகப் போட்டுக் கொண்டோ, பைலை முகத்திற்கு எதிராக வைத்துக் கொண்டோ அமராதீர்கள்.
* தலைமுடியில் கைகளை அலைய விடாதீர்கள். ‘இன்டர்வியூ’ அறையில் அமர்ந்து கொண்டு, நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் கவனம் செலுத்தாதீர்கள்.
* தேர்வுக் குழுவினரை, நேராக அவர்கள் கண்களை பார்த்து பேச வேண்டும். அதற்காக வெறித்துப் பார்க்கக் கூடாது.
* நேர்முகக் குழுவினரில் ஒருவருக்கு மேல் இருந்தால், உங்களிடம் யார் கேள்வி கேட்டாரோ, அவரைப் பார்த்துப் பதிலளியுங்கள். அதே நேரம், பிறரிடமும் உங்களது பார்வை சென்று வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
*தேவைக்கு அதிகமாக கைகளை அசைத்துப் பேசாதீர்கள். அதற்காக கைகளை அசைக்காமல், ‘மிஷின்’ போல பேச வேண்டாம்.
* தேர்வுக்குழுவினர் பேசும் போது, லேசாக தலையை அசைத்து, நீங்கள் கவனிப்பதை அவர்களுக்கு உணர்த்தலாம். இது இயல்பாக இருக்க வேண்டும்.
* பயப்படுவது போலவும் காட்சியளிக்கக் கூடாது.
இவற்றை சரியாய் பின்பற்றினால், உங்களுக்கு 50 மார்க் போட்டு விடுவர். மீதி மார்க், உங்கள் திறனுக்கு!