/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
நிர்வாகக் குறைகளால் கானல் நீராகும் பணி வாய்ப்புகள்
/
நிர்வாகக் குறைகளால் கானல் நீராகும் பணி வாய்ப்புகள்
நிர்வாகக் குறைகளால் கானல் நீராகும் பணி வாய்ப்புகள்
நிர்வாகக் குறைகளால் கானல் நீராகும் பணி வாய்ப்புகள்
மார் 07, 2009 12:00 AM
மார் 07, 2009 12:00 AM
இந்தியாவிலுள்ள 18 இரும்பு, பவர் மற்றும் ஆட்டோ புராஜக்ட்களில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகளால் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகாமல் போனதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
நில ஆர்ஜிதம், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் சரியான அணுகுமுறையின்மையே இதற்குக் காரணமாக உள்ளது. இந்தியாவின் வர்த்தக அமைப்பான அசோசாம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் முக்கியமான சாராம்சங்கள் இவை தான்.
* தடைப்பட்டு நிற்கும் 18 திட்டங்களின் மதிப்பு 2 லட்சத்து 45 ஆயிரம் கோடியாகும். இவற்றை நிறைவேற்றுவதற்கான உடன்பாடுகள் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட போதிலும் அவை வெறும் எழுத்துவடிவில் மட்டுமே உள்ளன.
* இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேர் நேரடியாகவும் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருப்பர்.
* பவர், இரும்பு, ஐ.டி., ரியல் எஸ்டேட், உலோகங்கள், சுரங்கம் போன்ற துறைகளில் நிறைவேற்றப்பட்õத இந்தத் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு
தர வேண்டிய ஒப்புதல் கிடைக்காததே காரணம் என்று அசோசாம் தெரிவிக்கிறது.
* ஒரிசாவில் சிறப்புப் பொருளாதார மண்டல ஒப்புதல் இல்லாததாலேயே போஸ்கோ இந்திய ஸ்டீல் நிறுவனம் தொடங்கப்படாத நிலை யென்றும் இதற்காக இதுவரை 150 கோடி ரூபாய் மூலதனமாக இடப்பட்டிருப்பதாகவும் அசோசாம் தெரிவிக்கிறது.
* நில ஆர்ஜிதம் செய்வதிலுள்ள குறைகள் மிக முக்கிய தடைக்கல்லாக இருப்பதாகவும் ஒரு சிறிய ஒப்புதல் சமிக்ஞை கிடைத்திருந்தால் கூட கிட்டத்தட்ட 35 ஆயிரத்து 730 பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும் அசோசாம் கூறியுள்ளது.
* ஜார்க்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர் போன்றவற்றில் தொடங்கப்படவிருந்த டாடா ஸ்டீல் திட்டமும் நில ஆர்ஜிதம் காரணமாக இழுபறியில் உள்ளது. இவற்றில் மட்டும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். இதே நிலையில் தான் ஆர்சலர்-மிட்டல் திட்டங்களும் 3 ஆண்டுகளாக பிரச்னையில் உள்ளன.
* ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரும்பு தாதுப் பொருட்கள் வளமாக உள்ளன. ஆனால் போதுமான இட வசதி கிடையாது. ஒரிசாவிலோ இடவசதி இருந்த போதும் இயற்கை வளங்கள் கிடையாது. இந்த 2 மாநிலங்களையும் ஒருமித்து 43 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் பணிகள் கிடைத்திருக்கும்.
* ஆட்டோமோடிவ் துறையிலும் இதே இழுபறி நிலை தான் நிலவுகிறது. ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களுடன் இணைந்த எம் அண்ட் எம் நிறுவனத்தின் திட்டமானது நில ஆர்ஜித பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கும் என்று அசோசாமின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.