/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
சட்டமேதை நினைவாக மத்திய பல்கலை., சிறந்த கல்வி நிறுவனங்கள் (49)
/
சட்டமேதை நினைவாக மத்திய பல்கலை., சிறந்த கல்வி நிறுவனங்கள் (49)
சட்டமேதை நினைவாக மத்திய பல்கலை., சிறந்த கல்வி நிறுவனங்கள் (49)
சட்டமேதை நினைவாக மத்திய பல்கலை., சிறந்த கல்வி நிறுவனங்கள் (49)
மார் 21, 2009 12:00 AM
மார் 21, 2009 12:00 AM
உத்தரபிரதேசத்தின் லக்னோவில் அமைந்துள்ளது பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம். இந்திய அரசியல்சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் நினைவாக இந்த பல்கலைக்கழகத்தை மத்திய அரசு தொடங்கியது. 1996ம் ஆண்டு முதல் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதுநிலை படிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்
இன்பர்மேஷன் சயின்ஸ்
அண்டு டெக்னாலஜி பிரிவின் கீழ்
- கம்ப்யூட்டர் சயின்ஸ்
- லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்ஸ்
- இன்பர்மேஷன் டெக்னாலஜி
- மாஸ் கம்யூனிகேஷன் அண்டு ஜர்னலிசம்
பயோசயின்ஸ் அண்டு பயோடெக்னாலஜி பிரிவின் கீழ்
- அப்ளைடு பிளான்ட் சயின்ஸ்
- அப்ளைடு அனிமல் சயின்ஸ்
- பயோடெக்னாலஜி
அம்பேத்கர் ஸ்டடீஸ் பிரிவின் கீழ்
- பொருளாதாரம்
- வரலாறு
- சோஷியாலஜி
- பொலிட்டிக்கல் சயின்ஸ்
சட்டப்பிரிவின் கீழ்
- மனித உரிமை
- சட்டம்
இது தவிர சுற்றுச்சூழல் அறிவியல், ஹியூமன் டெவலப்மென்ட் அண்டு பேமிலி ஸ்டடீஸ் ஆகிய துறைகளும் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ளன.
இந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்
- எம்.சி.ஏ.,
- எம்.எல்.ஐ.எஸ்சி.,
- எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
- எம்.எஸ்சி., மாஸ்கம்யூனிகேஷன் அண்டு ஜர்னலிசம்
- எம்.எஸ்சி., ஹார்ட்டிகல்சர்
- எம்.எஸ்சி., செரிகல்சர்
- எம்.எஸ்சி., அப்ளைடு அனிமல் சயின்ஸ்
- எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி
- எம்.ஏ., பொருளாதாரம்
- எம்.ஏ., வரலாறு
- எம்.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ்
- எம்.ஏ., சோஷியாலஜி
- எல்.எல்.எம்., (மனித உரிமைகள்)
- எல்.எல்.எம்., (சட்டம்)
- எம்.எஸ்சி., சுற்றுச்சூழல் அறிவியல்
- எம்.எஸ்சி., என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி
- எம்.எஸ்சி., ஹியூமன் டெவலப்மென்ட் அண்டு பேமிலி ஸ்டடீஸ்
கம்ப்யூட்டர் சயின்ஸ், லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, அப்ளைடு பிளான்ட் சயின்ஸ், அப்ளைடு அனிமல் சயின்ஸ், பயோடெக்னாலஜி, பொருளாதாரம், அறிவியல், மனித உரிமைகள், என்விரான்மென்டல் சயின்ஸ், என்விரான் மென்டல் மைக்ரோபயாலஜி ஆகிய துறைகளில் பிஎச்.டி., படிக்கும் வசதி உள்ளது.
இந்த பல்கலைக்கழக ஹாஸ்டல் 250 மாணவர்கள் வரை தங்கும் வசதி கொண்டது. வங்கி, தபால்நிலையம், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவையும் இந்த பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சென்னை உட்பட 5 முக்கிய நகரங்களில் இதற்கான நுழைவுத்தேர்வு நடக்கிறது.