/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வெளிநாடு சென்று படிக்க வேண்டுமா (3)
/
வெளிநாடு சென்று படிக்க வேண்டுமா (3)
ஏப் 04, 2009 12:00 AM
ஏப் 04, 2009 12:00 AM
இந்த வாரம் ‘டோபல்’ தேர்வுகள் குறித்து காண்போம். ‘டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் அஸ் எ பாரின் லாங்குவேஜ்’ என்பதில் சுருக்கமே ‘டோபல்’.
ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளை தாய்மொழிகளாக கொண்டவர்களின் ஆங்கில அறிவை சோதிப்பதற்காக ‘டோபல்’ தேர்வு நடத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பதாரர்களிடம் ‘டோபல்’ மதிப்பெண் பற்றி கேட்கின்றன. ஏறத்தாழ 2 ஆயிரத்து 400 கல்வி நிறுவனங்களில் ‘டோபல்’ மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன.
இ.டி.எஸ்., எனப்படும் ‘எஜுகேஷனல் டிரஸ்டிங் சர்வீஸ்’ என்ற அமைப்பே இந்த தேர்வுகளுக்கு பொறுப்பேற்றுள்ளது. வினாக்களை அமைப்பது, தேர்வுகளை நடத்துவது, மதிப்பெண்களை அனுப்பி வைப்பது இவர்களின் பொறுப்பு. இந்தியாவில் ஒன்பது மையங்களில் தேர்வுகளை நடத்த ‘தாம்சன் புராமெட்ரிக்’ என்ற நிறுவனத்தை இ.டி.எஸ்., நியமித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தேர்வு மையங்கள்: ஆமதாபாத், அலகாபாத், பெங்களூரு, கோல்கட்டா, சென்னை, ஐதராபாத், மும்பை, குர்கான் மற்றும் திருவனந்த
புரம். இன்டர்நெட் சார்ந்த ‘டோபல் ஐ.பி.டி.,’ தேர்வில் நான்கு விதமாக மாணவர்கள் சோதிக்கப்படுகின்றனர்; கவனிக்கும் திறன், பேசும் திறன், எழுதும் திறன், வாசிக்கும் திறன். வெற்றிபெற தேவையான ஆங்கில அறிவு உள்ளது என மாணவர்கள் இந்த தேர்வில் நிரூபிக்க வேண்டியது அவசியம். மாணவரால் ஆங்கிலத்தில் பாடத்திட்டத்தை எதிர்கொள்ள முடியுமா என்பதை இந்த தேர்வு சோதிக்கிறது.
மாணவர்கள் ஆன்லைன் முறையில் இந்த தேர்வுக்காக எளிதாக பதிவு செய்து கொள்ளவும், மதிப்பெண்களை பெறவும் முடியும். வெளிநாட்டு கல்வித்திட்டத்துக்கு இந்த மாணவர் ஏற்றவரா என்பதை இந்த தேர்வு சோதிக்கிறது. வாசித்த, கவனித்த விஷயங்களைப் பற்றி திறமையாக பேசவும் எழுதவும் முடிகிறதா என்பது இந்த தேர்வில் சோதிக்கப்படுகிறது. படிப்பில் வெற்றி பெறத்தேவையான ஆங்கில தகவல்தொடர்பு திறன் உள்ள மாணவர்களை கல்வி நிறுவனங்கள் இதன் மூலமாக கண்டுகொள்ள முடியும்.
இந்த தேர்வு நான்கு மணி நேரம் நடத்தப்படுகிறது. 15 வேலை நாட்களுக்குள்ளாக மாணவர்களுக்கு மதிப்பெண் கிடைத்துவிடுகிறது. அடுத்த நான்கைந்து தினங்களுக்கு உள்ளாக மதிப்பெண் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.