/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஒரே பல்கலை.,யில் பி.இ., எம்.பி.பி.எஸ்., - சிறந்த கல்வி நிறுவனம் (56)
/
ஒரே பல்கலை.,யில் பி.இ., எம்.பி.பி.எஸ்., - சிறந்த கல்வி நிறுவனம் (56)
ஒரே பல்கலை.,யில் பி.இ., எம்.பி.பி.எஸ்., - சிறந்த கல்வி நிறுவனம் (56)
ஒரே பல்கலை.,யில் பி.இ., எம்.பி.பி.எஸ்., - சிறந்த கல்வி நிறுவனம் (56)
மே 10, 2009 12:00 AM
மே 10, 2009 12:00 AM
சட்டீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழகம் 1983 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இம்மாநிலத்தில் செயல்படும் இரண்டு பல்கலைக்கழகங்களில் ஒன்று. இதனுடன் 125 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பிலாஸ்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உயர்கல்வி வழங்குவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் கலை, வணிகம், கல்வி, இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, லா அண்டு ஹியுமேனிட்டீஸ், லைப் சயின்ஸ், மேனேஜ்மென்ட், மருத்துவம், பார்மசி, அறிவியல், சமூகஅறிவியல் போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாநிலத்திலேயே இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பை வழங்கும் ஒரே பல்கலைக்கழகம் இது.
இந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகம் பிலாஸ்பூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் 875 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. அம்பிகாபூரிலும் இந்த பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் அமைந்துள்ளது. இந்நகரம் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம்.
இதில் உள்ள படிப்புகள்
- எம்.பி.பி.எஸ்.,
- எம்.பார்ம்.,
- பி.பார்ம்.,
- டி.பார்ம்.,
- பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்
- பி.இ., எலக்ட்ரிக்கல் அண்டு காமன் இன்ஜினியரிங்
- பி.இ., இண்டஸ்ட்ரியல் அண்டு புரடக்ஷன் இன்ஜினியரிங்
- பி.இ., கெமிக்கல் இன்ஜினியரிங்
- பி.இ., இன்பர்மேஷன் டெக்னாலஜி
- எம்.சி.ஏ.,
- எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
- எம்.ஏ., ஆந்ரபாலஜி
- எம்.எஸ்சி., பாரஸ்ட்ரி, ஒயில்ட்லைப் அண்டு என்விரான்மென்டல் சயின்ஸ்
- எம்.பில்., சோஷியல் ஆந்ரபாலஜி
- எம்.பில்., காமர்ஸ்
- எம்.பில்., பொருளாதாரம்
- பி.ஜி., டிப்ளமோ இன் ஹியூமன் டெவலப்மென்ட்
- பி.எஸ்சி., பயோ டெக்னாலஜி
- எம்.எஸ்சி., பயோ டெக்னாலஜி
- எம்.காம்., பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
- எம்.ஏ., ஆங்கிலம்
- எம்.எஸ்.டபுள்யூ.,
- எம்.எம்.சி.ஜே.,
- பி.லிப்., எல்.எஸ்சி.,
- எல்.லிப்., எல்.எஸ்சி.,
- எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ்
- எம்.எஸ்சி., இயற்பியல்
- எம்.எஸ்சி., கணிதம்
- எம்.எப்.எம்.,
இந்த பல்கலைக்கழக்கத்தின் நூலகத்தில் 85 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. தபால்வழிக் கல்வியாக பி.ஏ., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., போன்ற படிப்புகளையும் இந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி ஹாஸ்டல் வசதிகள் உள்ளன. இங்குள்ள ஹாஸ்டல்களில் 250 மாணவர்கள், 200 மாணவிகள் தங்கிப்படிக்கலாம்.