sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

வெளிநாடு சென்று படிக்கலாம் (11)

/

வெளிநாடு சென்று படிக்கலாம் (11)

வெளிநாடு சென்று படிக்கலாம் (11)

வெளிநாடு சென்று படிக்கலாம் (11)


மே 30, 2009 12:00 AM

மே 30, 2009 12:00 AM

Google News

மே 30, 2009 12:00 AM மே 30, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படிப்பதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து காண்போம்.

ஒரு மாணவன் படித்து முடித்து ஆறு மாதங்களுக்குப் பின்னர், அந்த மாணவனின் வேலைவாய்ப்பு சார்ந்த புள்ளி விபரங்களை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் சேகரித்து வைக்கிறது. இந்த விபரங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த விபரங்கள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். இதைக் கொண்டு, வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் மதிப்பை அறியலாம். செலவு படிப்புக்கான செலவை குறைப்பதில் பல வழிகள் உள்ளன. இருந்தாலும், கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களில் வசதி படைத்தவர்கள் தான் படிக்கக் கூடிய நிலை உள்ளது.

பகுதி நேர வேலை வாய்ப்பு
பகுதி நேரமாக வேலை பார்த்து சம்பாதிப்பதன் மூலம், படிப்பு செலவின் சுமையை குறைக்க முடியும் என்பதால், வெளிநாட்டுக்கு செல்லும் மாணவர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர். ஆனால் அதே நேரம் இந்த வேலையால் படிப்பு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை பார்த்து சம்பாதிக்க பல நாடுகள் அனுமதிக்கின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள மாணவர் சங்கங்கள் பகுதி நேர வேலைவாய்ப்பை பெற உதவுகின்றன.

சமூக காரணங்கள்
படிப்பதற்கான கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வதில், நிறுவனங்கள் அமைந்திருக்கும் இடம், நிறுவனத்தின் தோற்றம், வசதிகள், கல்வி தரம், பாடத்திட்டம் முதலிய காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சர்வதேச மாணவர் சேவை
வெளிநாடுகளில் படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தகவல்களை அளிக்க கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் மாணவர் சேவை அலுவலர்கள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us