/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
நிதி திரட்ட கற்றுத்தரும் ரிசோர்ஸ் மொபிலிசேஷன்
/
நிதி திரட்ட கற்றுத்தரும் ரிசோர்ஸ் மொபிலிசேஷன்
ஆக 08, 2009 12:00 AM
ஆக 08, 2009 12:00 AM
முன்பு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் பணி நிர்வாக இயக்குனர்களிடமோ அல்லது நிர்வாகத்திடமோ ஒப்படைத்திருந்தனர். போட்டி நிறைந்த உலகில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூட விரைந்து செயல்பட தொடங்கி விட்டன. அதனால் தேவையான நிதியை திரட்டுவதிலும், பயன்படுத்துவதிலும் மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
நிதி திரட்டுதலை ஒழுங்குமுறைப்படுத்தவும், அது தொடர்பான நுட்பங்களை கற்றுத்தரவும் மும்பையில் உள்ள எஸ்.பி., ஜெயின் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் நான்கு மாத சான்றிதழ் படிப்பை தொடங்கியுள்ளது. ஒழுங்குமுறையில்லாமல் திரட்டப்படும் நிதிகளை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வருவதே இக்கல்விநிறுவனத்தின் நோக்கம் ஆகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு ஏற்றார்போல் நிகழ்ச்சிகளை நடத்தி, அல்லது தனிப்பட்ட முறையில் ஒரு நபரை நியமித்து நிதியை திரட்டுவார்கள்.
மிகப்பெரிய நிறுவனங்களுக்கு இந்த முறை பொருத்தமாக இல்லை. இதற்கென படித்தவர்களை கொண்டு நிதியை திரட்ட ஆரம்பித்தனர். சர்வதேச நிறுவனங்கள்அவ்வப்போது நடந்த நிகழ்வுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது, நிதியை மாற்றுவது என்பதைப்பற்றி இப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. இதில் 5 முக்கியப் பிரிவுகள் உள்ளன.
அவை அடிப்படை அறிவு, தகவல் பரிமாறும் திறன், தனிநபர் வருமானம், எண்டர்பிரைஸ், ஒழுங்குமுறை மற்றும் திட்டமிடல். இதில் மாணவர்களுக்கு அசைன்மென்ட், பிராஜக்ட் ஒர்க், குழுசார்ந்த செயல்முறைகள், ஒவ்வொரு குழுவாக பிரித்து குழுத்தலைவரை நியமித்து கற்றுத்தருதல்,இத்துறை சார்ந்த நிபுணர்களின் சிறப்பு வகுப்புகள், விளையாட்டு போன்ற முறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பணியாற்றிக்கொண்டே படிப்பவர்களுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இதில் பயிற்சிகள் உள்ளன.
இந்த படிப்பை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது எஸ்.பி.ஜெயின் கல்வி நிறுவனம். தற்போது பல்வேறு கல்வி நிறுவனங்களில் இப்படிப்பு கற்றுத் தரப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள மதுரா இன்ஸ்டிடியூட் பார் கம்யூனிகேசன், புவனேஸ்வரில் உள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் மற்றும் பாரதிய பவன் போன்றவை அவற்றுள் முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.
சமூக தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை நிதி திரட்டுவதில் பழைய முறைகளை மாற்றிக்கொண்டதால் தற்போது இப்படிப்பை முடித்தவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இப்படிப்பிற்கான கட்டணம் 15 ஆயிரம் ரூபாய். இப்படிப்பை முடித்தவர்கள் தொடக்கநிலையில் வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறலாம்.