தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மந்தமாக பயிலுவோரை மேம்படுத்த புதிய திட்டம்

மந்தமாக பயிலுவோரை மேம்படுத்த புதிய திட்டம்

மந்தமாக பயிலுவோரை மேம்படுத்த புதிய திட்டம்


அக் 24, 2009 12:00 AM

அக் 24, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 24, 2009 12:00 AM அக் 24, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 

அனைவருக்கும் கல்வி என்னும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் மந்தமாகக் கல்வி கற்பவர்களுக்கான பிரத்யேகமான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது ‘ஆவோ பதே ஹம்‘ என்று இத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசுப் பள்ளிகளில் ஆரம்பப் படிப்பு படிப்பவர்களில் மந்தமாகப் படிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அறிவு மேம்பாட்டிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த முயற்சியின் முதற்கட்டமாக கஸ்தூரிபா காந்தி பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிப்பவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 4 கோடி ரூபாய் நிதியுடன் தொடங்கும் இத் திட்டத்தின் மூலமாக 6 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 4 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் மதிப்பிடப்படுகின்றனர். வரும் நவம்பர் மாதம் 7ந்தேதி முதல் இந்தப் புதிய முயற்சி நடைமுறைக்கு வரவுள்ளது. 2ம் வகுப்பு வரையிலான பாடங்களை முதலில் இவர்களுக்குப் பயிற்றுவித்துப் பின் அவரவர் வகுப்புக்கு ஏற்ற பாடங்கள் நடத்தப்படவுள்ளன.

இந்தப் புதிய முயற்சியின் கீழ் 25 பள்ளிகளுக்கு ‘பிளாக் ரிசோர்சஸ் சென்டர் பெசிலிடேட்டர்‘ அந்தஸ்தும் 2 பள்ளிகளுக்கு ‘கிளஸ்டர் ரிசோர்சஸ் பெசிலிடேட்டர்‘ அந்தஸ்தும் தரப்படவுள்ளது. பள்ளிகளை ஆய்வு செய்தபின் அறிக்கை தரப்படும். பள்ளியை விட்டுப் பாதியில் நின்றவர்களுக்கு மாற்றுப் பள்ளி போன்ற முயற்சிகளும் விரைவில் சர்வ சிக்ச அபியானால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us