தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/திருப்தியுடன் வருமானம் தரும் ‘பிசினஸ் போட்டோகிராபி’

திருப்தியுடன் வருமானம் தரும் ‘பிசினஸ் போட்டோகிராபி’

திருப்தியுடன் வருமானம் தரும் ‘பிசினஸ் போட்டோகிராபி’


நவ 13, 2009 12:00 AM

நவ 13, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 13, 2009 12:00 AM நவ 13, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமானது என்று சொல்லப்படுகிறது. சில நேரங்களில் எத்தனை வார்த்தைகளாலும் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் உணரச் செய்துவிடும்.

தாங்கள் கண்டு வியந்த இடங்கள், உயிரினங்கள், இயற்கை ஜாலங்களை சேமித்து வைக்கவும், மீண்டும், மீண்டும் பார்த்து பூரிப்படையவும் இந்த விஞ்ஞான வளர்ச்சி நமக்கு உதவுகிறது. இந்த கலையுணர்வுக்கு சற்று முக்கியத்துவம் அளித்து, உங்களது ஆர்வத்தை அதிகரித்து, சிறந்த புகைப்படங்கள் எடுப்பதில் ரசனையை மெருகேற்றினால் மன திருப்தியுடன் வருமானமும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

வருமானம் அதிகம் பெறுபவர்களும் தங்களது பணியில் போதிய திருப்தி கிடைக்காமல் இருப்பதை பார்க்கமுடிகிறது. ஆனால், இவற்றிற்கு விதிவிலக்காக போட்டோகிராபி துறை உள்ளது. இத்துறையில் தங்களது ஆர்வத்தை வெளிகாட்டும் அளவிற்கு ஒருவரது கலையுணர்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கேமராக்கள் செய்யும் வித்தைகள் பல..

போட்டோகிராபி துறையில் முழுநேரமாக ஈடுபட்டுள்ளவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். பணிபுரிந்துகொண்டே, தங்களது திருப்திக்காக இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அதைவிட அதிகம். இவர்களில் பகுதிநேரமாக இத்துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்க ‘பிசினஸ் போட்டோகிராபி’ உதவுகிறது. இதில், வெற்றிபெறுவதற்கு தனித்துவம் மிக்க புகைப்படங்கள் (புரொபஷனல் போட்டோகிராபி) எடுக்கும் திறன் தேவைப்படுகிறது. பொதுவாக, சிறந்த புகைப்படம் எடுப்பதே இங்கு புரொபசனல் போட்டோகிராபியாக கருதப்படுகிறது. அவ்வாறு சிறந்த புகைப்படம் எடுப்பவர்கள் அதை சரியான முறையில் விற்கத் தெரிந்தால் போதும். இந்த இரண்டும் தான் பிசினஸ் போட்டோகிராபிக்கு அடிப்படை.

சரி, சிறந்த புகைப்படம் எடுப்பதற்கு என்ன தேவை:
புகைப்படம் எடுப்பதில் அறிவு மற்றும் அனுபவம்.
வேறுபட்ட அதேசமயம், சரியான கோணத்தில் ஒன்றை பார்க்கும் கலையுணர்வு
கேமராக்களை முறையாக கையாள்வது, கேமரா, லைட்டிங் உட்பட தொழில்நுட்ப அறிவு

வியாபாரத் திறன்கள்:
விளம்பரம், விற்பனை செய்யும் திறன் ஆகியவை அடங்கிய சந்தைப்படுத்தும் திறமை.
நிர்வகிக்கும் திறமை
ஆவணங்களை பாதுகாக்கும் திறன்

இவை தவிர, தகவல்தொடர்பு திறன், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், பணிவு போன்றவற்றையும் பெற்றிருப்பது உங்களது வெற்றிக்கு அடிகோலும். இயற்கை அழகுடன், சந்தையில் தேவையுள்ள புகைப்படங்களை கேமாரக்களில் பதிவுசெய்யும் வியாபார யுக்தியையும் கற்றுக்கொள்ளவது சிறந்தது. புகைப்படங்களை சந்தைப்படுத்துவதற்கு இணையதளங்கள் பெரிதும் உதவுகின்றன.

திட்டமிடுதல்:
ஒவ்வொரு பிசினஸ் போட்டோகிராபியும் வியாபார திட்டமிடலுடன் துவங்குகிறது. எந்த ஒரு புதிய வியாபாரத்திற்கும் முதலீடு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. எனவே, திட்டமிடுவதில் நிதி உதவி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிறந்த புகைப்படம் எடுப்பதற்கு தேவையான தொழில்நுட்பங்களுக்கும், அவற்றை சந்தையிடுவதற்கும் தேவையான நிதியை திட்டமிடுவது மிக அவசியம்.

துறையில் உள்ள நுணுக்கங்கள், தற்போது சந்தையில் உள்ள வாய்ப்புகள், போட்டிகள் ஆகியவற்றை அறிந்து, உங்களது பொருளுக்கான தரத்தை மேம்படுத்தி, விற்பனை யுக்தியையும் திறம்பட செயல்படுத்தினால் வெற்றி உங்கள் பக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us