தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பெற்றோர்கள் கவனிக்க...

பெற்றோர்கள் கவனிக்க...

பெற்றோர்கள் கவனிக்க...


பிப் 01, 2010 12:00 AM

பிப் 01, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 01, 2010 12:00 AM பிப் 01, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பலருக்கு தங்கள் குழந்தைகள் எந்த பள்ளியில் என்ன வகுப்பு படிக்கிறார்கள் என்பது கூட தங்களுக்கு தெரியாது என்று கூறுவதை பெருமையாக கருதுகின்றனர். வீட்டை பொறுத்தவரை எல்லாமே என் மனைவிதான்.

நான் எதிலும் தலையிடுவது கிடையாது. குடும்பத்தினரை பற்றிய கவலை எனக்கில்லை என்பதால் எனது துறையில் கூடுதல் கவனம் செலுத்த என்னால் முடிகிறது என்று சிலர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். கணவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மனைவியும், குடும்ப விஷயங்களில் தலையிடவேண்டாம் என்று கணவனும் நினைத்துக் கொண்டிருந்தால் குழந்தை எதிர்காலம் பாதிக்கப்படும்.

லண்டனில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் பணிசெய்து வரும் அறிவியல் ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தின் நிதிநிலை, திணறவைக்கும் பிரச்னைகள், தீர்க்க முடியாத சச்சரவுகள் குறித்து குழந்தைகள் முன்னிலையில் விவாதிப்பதால் அவர்களின் எதிர்கால கனவுகள், உயர்ந்த லட்சியங்கள், சிகரத்தை தொடவேண்டுமென்ற ஆர்வம் அனைத்தும் கருவிலேயே கருகிபோய்விடுவதாக கண்டுபிடித்துள்ளனர்.

குழந்தைகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் பெற்றோர்கள் வேதனையில், விரக்தியில் ஈட்டிய செல்வத்தை தங்களுக்காக செலவிடுவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் குழந்தைகளிடம் இல்லாதது இந்த ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அன்பிற்குரிய பெற்றோர்கள் ஆர்வமிகுதியால் அதிகளவு சுமையை சுமந்து விடக்கூடாது என்று நினைக்கும் குழந்தைகள், அவர்களுக்கு சிரமத்தை கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தங்கள் எதிர்பார்ப்புகளை, ஏக்கங்களை மனதளவில் மறைத்துக் கொண்டு திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல், வழிகாட்டுதல் இல்லாமல் முளையிலேயே கருகிப்போய் விடுகின்றனர்.

குடும்பம் என்ற இலக்கணத்திற்கு, இலக்கியங்களாக திகழும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவில்லா அன்பு கொண்டிருப்பது இறைவனின் படைப்பில் இயல்பானதாக கருதப்பட்டாலும், குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள பெற்றோர்கள் தங்களின் வறுமையை, இயலாமையை, வேதனையை மறைத்து விட்டு அவர்களின் நலனிற்காக தங்களை தியாகம் செய்ய வேண்டும் என்று லண்டன் அறிவியலாய்வாளர்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us