தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அழகுபடுத்தும் கலை

அழகுபடுத்தும் கலை

அழகுபடுத்தும் கலை


பிப் 02, 2010 12:00 AM

பிப் 02, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 02, 2010 12:00 AM பிப் 02, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அழகுபடுத்தும் கலைத்துறையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்பதை அதிகரித்துக் கொண்டிருக்கும் அழகுக்கலை மையங்களை வைத்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.

உடலை சுத்தமாக வைத்திருப்பதோடு அழகுப்படுத்தி பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவர் மத்தியிலும் இயல்பாக அமைந்துள்ளது. நடன, நாட்டியம் மற்றும் சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக ஒப்பனை கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதை போன்று தற்போது அனைத்து தரப்பினரையும் அழகுபடுத்துவதற்காக தொழில்முறை கலைஞர்கள் அனைத்து பகுதிகளிலும் உருவாகி வருகின்றனர்.

வீட்டில் நடக்கும் விசேஷநிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதில் பங்கேற்கும் மகளிரை அழகுபடுத்துவதற்காக அவர்களது இல்லத்தில் தங்கியிருந்து நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர் தங்கள் பணியைமுடித்துக் கொடுக்கும் அழகுகலை நிபுணர்கள் அதிக அளவில் உள்ளனர். அதேப் போன்று ஆண்களை பொறுத்தவரை முடி திருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சலூன்களும் இன்று முகத்தை அழகுபடுத்துவதிலிருந்து நரைத்த முடிக்கு கருப்புசாயம் தடவி அவற்றை மறைப்பது வரை அனைத்து பணிகளையும் செய்து கொடுக்கின்றனர்.

வாடிக்கையாளர்களின் அபரிமிதமான நம்பிக்கையை பெற்றுவிட்டால் எதிர்பார்த்ததை விட அதிக வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இந்த துறையில் அதிக அளவில் உள்ளன. வாடிக்கையாளரின் மனோநிலையை தெரிந்து கொண்டு அவர் விருப்பத்திற்கேற்ப அவரை அழகுப்படுத்துவது இத்துறையை பொறுத்தவரை சவாலான விஷயமாக கருதப்படுகிறது.

பெரும்பாலானவர்களுக்கு திருப்தி என்பது எளிதில் வந்துவிடாது. அப்படிப்பட்டவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இப்பணியை ஒருவர் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டால் குறிப்பிட்ட அந்த நபரின் மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இத்துறையில் குவிந்து கிடக்கின்றன. அதேப்போன்று அதிருப்தியடையும் வாடிக்கையாளரால் மற்ற வாடிக்கையாளர்களை இழக்கும் அபாயமும் இதில் உள்ளது. கத்திமேல் நடக்கும் பணி என்பதால் அழகுக்கலைக்கு தனி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு சேதாரமில்லாத, தோல்களுக்கு ஒவ்வாத ரசாயனகலவைகள் கலக்கப்படாத சாயங்களை பயன்படுத்துவதிலிருந்து விரல் நகங்களை பளபளப்பாக்குவது வரை அனைத்து விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

நட்புரீதியாக மற்றவர்களை அணுகும் தன்மை, உடற்கூறு ரகசியங்களை வெளியிடாத மனோபாவம், புன்னகை பூத்த முகம் மற்றும் பார்க்கத்தூண்டும் உடல் அமைப்பு போன்றவை இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் அடிப்படை தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்தொழிலின் நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பதற்காக தனியார் பள்ளிகள், கோடைகால சிறப்பு பயிற்சி நிறுவனங்கள், பெண்களுக்கான தொழில் நுட்ப பள்ளிகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான பயிற்சியளிக்கும் நிறுவனங்களில் அழகுக்கலை தொடர்பான விரிவுரைகள், செயல்முறை விளக்கங்கள், செய்முறை நிகழ்வுகள் மூலமாக கற்றுக்கொடுக்கப்படுகின்றன. உடற்கூறுகள், அழகு தொடர்பாக ஒவ்வொருவரின் மனநிலையை புரிந்து கொள்ளும் விதம், அடிப்படையாக தேவைப்படும் அழகு தொடர்பான குறிப்புகள் போன்றவை விரிவுரைகளில் தெளிவுபடுத்தப்படுகின்றன.

அழகுக்கலை தொடர்பாக செயல்படும் பயிற்சி நிறுவனங்கள் பெயர் விபரம் வருமாறு:

விஎல்சிசி இன்ஸ்டியூட் ஆப் பியூட்டி ஹெல்த் அண்ட் மேனேஜ்மெண்ட், டி-64, டிபன்ஸ் காலனி, நியூ டில்லி-110024.

பிவோட் பாயிண்ட் இந்தியா, ஜே-1, 1 ஸ்ட் புளோர், கைலாஷ் காலனி, நியூ டில்லி-110048.

அக்பர் பீர்பாய் பெண்கள் பாலிடெக்னிக், 92, டாக்டர் டிஎன் ரோடு, போர்ட், மும்பை-400001.

செக்நாஷ் ஹெர்பல் உமன்ஸ் வேர்ல்டு இன்டெர்நேசனல், ஷீ பேர்டு பில்டிங், பந்த்ரா, மும்பை-400050.

சிக்னல் ஹேன்ஸ் இன்டர்நேசனல் ஸ்கூல் ஆப் பியூட்டி, ஹேர்டிரஸ்சிங் அண்ட் காஸ்மெட்டாலஜி, 111/112. நிக்கோலா, மிஸ்ட்ரி சேம்பர்ஸ், ஆப்.ஸ்ட்ரென்ட், கொலபா, மும்பை-400005.

விஎல்சிசி, 352 லிங்கிங் ரோடு, கார்(மேற்கு) மும்பை.

எல்ஏடி காலேஜ் ஃபார் உமன் ஃபார் ஆர்ட்ஸ், காமர்ஸ் அண்ட் சயின்ஸ், நாக்பூர்-440010

ஃபார் பி டெக் அண்ட் எம் டெக் இன் காஸ்மெடிக் டெக்னாலஜி ஆப்டர் பிளஸ் டூ வித் பிசிபி/எம் பாலிடெக்னிக் ஃபார் உமன், ஏ-3, சவுத் எக்ஸ்டென்சன்-1, ரிங்ரோடு, நியூ டில்லி-110049.

ஒய்டபிள்யூசிஏ ஆப் டில்லி, உமன்ஸ் டிரெய்னிங் இன்ஸ்டியூட், பங்களா சாகிப் லேன், நியூ டில்லி-110001.

செப்ஸ் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, செப்ஸ், எம்ஐடிசி, மாரல், அந்தேரி, மும்பை-400093.

பிரமிளாவிதால்தாஸ் பாலிடெக்னிக், எஸ்என்டிறி, ஜூகு தாரா ரோடு, சாந்தாகுரூஸ் (மே), மும்பை-400049.

நேசனல் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, டாக்டர் பானுபென் நானாவதி காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் பிரிமிசஸ், கார்விநகர், புனே-411052.(மகளிருக்கு மட்டும்).

பியர்ல் அகாடமி ஆப் பேஷன், ஏ-21/13, நாராய்னா இன்டஸ்டிரியல் ஏரியா, பேஸ்-2, நியூ டில்லி-110028.

சிறிஸ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட், டிசைன் அண்ட் டெக்னாலஜி, போஸ்ட் பாக்ஸ் எண்-6430, ஈழகெங்கா, பெங்களூரு-64.

ஐஇசி ஸ்கூல் ஆப் ஆர்ட் அண்ட் பேஷன், ஐஇசி ஹவுஸ், எம்-92, கன்னாட் ப்ளேஸ், நியூ டில்லி-110001.

அப்பேரல் டிரெய்னிங் அண்ட் டிசைன் சென்டர்ஸ்(ஸ்பான்சர்டு பை ஏஇபிசி, மினிஸ்ட்ரி ஆப் டெக்ஸ்டைல்ஸ், கவர்ன்மெண்ட் ஆப் இந்தியா) அட் நியூ டில்லி, ஹைதராபாத், ஜெய்பூர், பெங்களூரு, கோல்கட்டா..

தி ஜெம்மோலாஜிக்கல் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா, 29, குருக்கள் சேம்பர்ஸ், 187-189 மும்பாதேவி ரோடு, மும்பை-400002.

ஜூவல்லரி டிசைன் அண்ட் டிரெய்னிங் இன்ஸ்டியூட், ஏ-89, செக்டர்-2, நொய்டா.

இந்தியன் டைமண்ட் இன்ஸ்டியூட், கத்தார்கெம், ஜிஐடிசி, சுமுல் டைரி ரோடு, சூரத்-395008.

வடிவமைப்பு பிரிவில் பிரத்யேக பயிற்சி பெற்றவர்கள் அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான வாய்ப்பகள் அபரிமிதமாக அமைந்துள்ளது. வடிவமைப்பாளர்களாக பயிற்சி பெறுபவர்கள் சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறுபவர்களாகவும், தான் ஏற்றுக் கொண்ட துறையில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களாகவும், கற்பனை திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த தகுதிகளை பெற்றவர்கள் பயிற்சி காலத்தில் சிறந்த மதிப்பெண் பெறாவிட்டாலும், பயிற்சியை நிறைவு செய்திருந்தால் தனி திறமைகளின் அடிப்படையில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us