தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இளம் வயதில் முக்கியமான அறிவியல்

இளம் வயதில் முக்கியமான அறிவியல்

இளம் வயதில் முக்கியமான அறிவியல்


பிப் 08, 2010 12:00 AM

பிப் 08, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 08, 2010 12:00 AM பிப் 08, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகின் மிகப்பெரிய கவுரவமாகக் கருதப்படும் நோபல் பரிசை வென்று, தமிழ் மண்ணுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.

இன்று, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் முன் மாதிரியாக விளங்குகிறார். பிரிட்டனில் கேம்பிரிட்ஜ், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின், மூலக்கூறு உயிரியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றும் இவர், தொடர்ச்சியான முயற்சி, கடின உழைப்பு ஆகிய இரண்டுக்கும் இலக்கணமாகத் திகழ்கிறார்.

அவர் கூறியதாவது:

குழந்தைகளைப் போல் தான் விஞ்ஞானிகளும். குழந்தைகள் தாங்கள் செய்ய விரும்பியதையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். விஞ்ஞானிகளும் அப்படித்தான்.

குழந்தைப் பருவத்திலேயே அறிவியல் வித்துக்களை அவர்கள் மனதில் விதைப்பதே சிறந்தது. விஞ்ஞானியாக இல்லாவிட்டாலும் அறிவியல் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம். தொழில்நுட்ப சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம். உங்களை சுற்றி இருப்பவர்கள் அல்லது அரசு எடுக்கும் நல்ல முடிவுகளை எப்படி நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். சுற்றுச்சூழல் மாசு, பூமி வெப்பமயமாதல் போன்ற விஷயங்கள் சரியானதுதானா என்பதை எப்படி அறிந்து கொள்வது. உயர்நிலைப் பள்ளி அளவிலாவது அறிவியல் படித்தால்கூட, அடுத்தவரின் வார்த்தை மூலம் தெரிந்து கொள்ளாமல், நீங்களாக பிரச்னைகளை சந்திக்க முடியும்.

எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது, என் பெற்றோர் தமிழகத்திலிருந்து பரோடா (வதோதரா) வந்துவிட்டனர். ஆங்கில வழி பள்ளி ஒன்று மட்டுமே இருந்தது. குஜராத்தி பள்ளிகளுக்கு அனுப்பும் எண்ணம் என் பெற்றோரிடம் இல்லை. அவர்களுக்கு குஜராத்தி தெரியாது. அவர்களால் எனக்கு குஜராத்தி சொல்லிக் கொடுப்பதில் உதவ முடியாது.

ஆசிரியர்கள் பேசுவதைக் கூட புரிந்து கொள்ள முடியாது என்பதால், ஆங்கில வழி பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தார்கள். அது இருபாலர் பள்ளியாக இருந்தது. நான் 2 - 3ம் வகுப்பு படிக்கும் போது, ரோசரி உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில வழி கல்வி இடம் பெற்றது. இதனால் நான் படித்துக் கொண்டிருந்த, கிறிஸ்தவ சகோதரிகளால் நடத்தப்பட்ட பள்ளி பெண்களுக்கான பள்ளியாக மாற்றப்பட்டது. ஆனால் முன்பு சேர்ந்த, பழைய மாணவர்கள் அப்பள்ளியிலேயே தொடர அனுமதிக்கப்பட்டனர். இதனால்தான் நான் ‘பெண்கள்’ பள்ளியில் படிக்க நேர்ந்தது.

நாங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கடைசியில் மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டது. நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்றுஎன் தந்தை விரும்பினார். பரோடா மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்தது. அதே நேரத்தில் தேசிய அறிவியல் திறனாய்வு ஸ்காலர்ஷிப் தேர்வும் எழுதியிருந்தேன். பல்வேறு துரை வாய்ப்புகளைப் பற்றி என் தாயார் அறிந்திருந்தாலும், குழந்தை எதை விரும்புகிறதோ அதை படிக்கட்டும் என்று எனது தாயார் அனுமதிப்பார்.

அந்நேரத்தில் ஸ்காலர்ஷிப் கிடைத்தால், வேறு எதற்கும் என்னை வற்புறுத்தக் கூடாது என்று என் தந்தையிடம் கூறியிருந்தேன். எனக்கு
ஸ்காலர்ஷிப் கிடைத்தது. என் தந்தை இல்லாத நேரத்தில், மருத்துவக் கல்லூரியிலிருந்து, இயற்பியல் பட்டத்துக்கான அட்மிஷன் பெற்றேன். அங்கிருந்த கிளார்க் கூட, நான் தவறு செய்துவிட்டதாக கருதினார். எனக்கு இன்னொரு வழி இருப்பதாகவே அப்போது தோன்றியது. குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அதை படிக்கச் சொல்ல வேண்டும். என்னுடைய மகன் இயற்பியல் ஹானர்ஸ் படித்து முடித் துள்ளான். ஆனால் அவன் இசைக்கலைஞராக உருவாகியிருக்கிறான். ஒருவருடைய விருப்பத்தில் நாம் எப்போதுமே தலையிடக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us