தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்...

நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்...

நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்...


பிப் 22, 2010 12:00 AM

பிப் 22, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 22, 2010 12:00 AM பிப் 22, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமூகம் சார்ந்த உளவியல் ஆய்வறிக்கை, குடும்பம் மற்றும் நண்பர்கள் நம்முடைய நடத்தையில் பெரும் பங்கு வகிப்பதாக தெரிவிக்கிறது.

நேர்மறையான உறவுகள் பாதுகாப்பான மன நிலைமையும், உலகுடன் ஒத்து வாழும் தன்மையும் அளிக்கும். எதிர்மறை உறவுகள் ஊறுவிளைவிக்கின்ற, கவலை அளிக்கின்ற, பாதுகாப்பற்ற மனநிலைமையை உண்டாக்கும். ஒருவர், குழந்தை மற்றும் மாணவப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கு மாறுகையில் குடும்பம் மற்றும் நல்ல நண்பர்களின் வழிகாட்டுதல் இல்லையென்றால் அவருடைய உடல் மற்றும் அறிவு சார்ந்த நடவடிக்கைகளில் விரும்பத் தகாத மாற்றங்கள் ஏற்படும்.

இளமைப் பருவத்தில் உள்ளவர்கள் பெற்றோரிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை. காரணம்... அவர்களுக்கு இடையே ஏற்படும் இடைவெளி. அந்த இடைவெளியை போக்குவது நல்ல நண்பர்கள். ஒரே பாலினம் அல்லது எதிர்பாலினத்தில் நண்பர்கள் அமையலாம். ‘உன் நண்பனைச் சொல் உன்னை சொல்கிறேன்’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நண்பன் அமைவதை பொறுத்தே நம்முடைய வாழ்க்கை பாதையில் மாற்றம் ஏற்படும்.

உங்கள் நட்பை மேம்படுத்த சில வழிகள்:

மரியாதை செய்யுங்கள்: ஒருவர் மற்றொருவரின் கருத்தை செவி கொடுத்து கேளுங்கள். அதனால் புரிதலும், தீர்வுகளும் ஏற்படும் நம்புங்கள் மற்றும் ஆதரவளியுங்கள் உங்களுடைய நண்பர்களை நம்புங்கள். அவர்களின் உணர்வுகள், எண்ணங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

நேர்மையாகவும், பொறுப்புடனும் செயல்படுங்கள்:  உங்கள் நண்பர்களிடம் எதையும் மறைக்காமலும், நேர்மையாகவும் செயல்படுங்கள். இதனால் உங்கள் உறவில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பகிர்ந்து கொள்ளுங்கள்: உங்களுடைய சுகம், துக்கம் அனைத்தையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் மன அழுத்தம் குறையும். கேடு விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதீர்கள். நண்பர்களுடன் பழகும் போது அவர்களை அச்சுறுத்தும் வகையிலோ, தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடாதீர்கள். ஒருவர் மற்றொருவருக்கு ஆறுதலாக இருங்கள். இதனால் நம்பிக்கை பெருகும். உங்கள் நட்பில் முன்னேற்றம் ஏற்படும்.

மேற்கூறியவற்றை கடைபிடித்து உங்கள் நட்பை சிறப்பாக்குங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us