தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அனைவருக்கும் தேவைப்படும் பகுத்தாராயும் திறன்

அனைவருக்கும் தேவைப்படும் பகுத்தாராயும் திறன்

அனைவருக்கும் தேவைப்படும் பகுத்தாராயும் திறன்


மார் 01, 2010 12:00 AM

மார் 01, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 01, 2010 12:00 AM மார் 01, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போட்டித் தேர்வுகளுக்கான பகுதிகளில் ஒன்றாக இருப்பது பகுத்தாராயும் திறன்.

இன்ஜினியரிங் போன்ற படிப்புகள் முடிப்பவருக்கு கேம்பஸ் இன்டர்வியூவிற்கு முன்பாக வைக்கப்படும் ஆப்டிடியூட் தேர்வில் இது இடம் பெறுகிறது. இது போலவே எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு, பல்வேறு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் இது கட்டாயம் இடம் பெறுகிறது. பி.ஓ., போன்ற அகில இந்திய தேர்வுகளில் கணிதம், ஆங்கிலம், பொது அறிவு இவற்றோடு தவறாமல் இடம் பெறும் பகுத்தாராயும் தேர்வில் ரீசனிங், ஆப்டிடியூட் போன்ற நமது அடிப்படைத் திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இதற்கு எப்படி தயாராவது என்பது பலருடைய கேள்வி.

ரீசனிங் பாடத்திட்டமானது எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாகும். வெர்பல், நான் வெர்பல் என 2 வகைக் கேள்விகள் தான் இதில் முதலில் பொதுவாக இடம் பெற்றன. ஆனால் லாஜிகல், அனலிடிகல் என இதன் எல்லைகள் விரிவடைந்து கொண்டே போகின்றன. தேர்வுகளில் போட்டியாளர்களைக் குறைக்க உதவும் முக்கிய பகுதியாக ரீசனிங் தான் இடம் பெறுகிறது.

ரீசனிங் பகுதியை அணுக முதலில் நமக்கு வேண்டியது போதிய ஆங்கிலமும் பொது அறிவும் தான். இவற்றை அடிப்படையாக வைத்துத் தான் கேள்விகள் ரீசனிங்கில் கேட்கப்படுகின்றன. இதன் பின் கேள்விகளின் வகைகளை அறிந்து அவற்றில் போதிய பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பயிற்சி தான் போட்டித் தேர்வுகளின் ஆதாரம். விஷயம் தெரியாவிட்டாலும் கூட அப்ஜக்டிவ் வகைக் கேள்விகளை சமாளிக்க பயிற்சி தான் தினசரி தேவையாக விளங்குகிறது.

லாஜிகல் வகைக் கேள்விகளில் பதிலளிக்க கொஞ்சம் கணிதத் திறனும் தேவைப்படுகிறது. வென் டயகிராம் போன்றவை இதில் சில கேள்விகளுக்கு விடையளிக்க மிகவும் உதவுகிறது. ரீசனிங் கேள்விகளைப் பொறுத்த வரை மார்க்கெட்டில் கிடைக்கும் கைடுகளில் மிக உபயோகமானது ஆர்.எஸ்.அகர்வால் தொகுத்திருக்கும் ரீசனிங் புத்தகம் தான். இந்த புத்தகத்தில் எண்ணற்ற பயிற்சி வினாக்கள் இடம் பெற்றுள்ளன. மாதப் பத்திரிகைகளில் பாங்கிங் சர்விசஸ் கிரானிகிள் மற்றும் காம்பெடிஷன் மாஸ்டர் ஆகியவை இந்தப் பகுதிக்குத் தயாராக பெரிதும் உதவும்.

தில்லான் குருப் பப்ளிகேஷன்ஸ் என்னும் பதிப்பகமானது ரீசனிங் பகுதிக்கான புத்தகங்களை வெளியிடுகிறது. பொதுவாக தனியாக ரீசனிங் பயிற்சியை மேற்கொள்வதை விட ஆரம்பப் பயிற்சியின் போது நண்பர் ஒருவரோடு மேற்கொள்வது இதில் நமது ஆர்வத்தை குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளும். நேஷனல் ஸ்கூல் ஆப் பாங்கிங் போன்ற அகில இந்திய போட்டித் தேர்வு நிறுவனங்கள் நடத்தும் சிறப்புப் படிப்புகளில் முக்கிய கவனம் ரீசனிங்கில் தான் காட்டப்படுகிறது.

ஆங்கிலம், கணிதம், பொது அறிவு போன்றவற்றில்  தலா 50 கேள்விகள் கேட்கப்பட்டால் ரீசனிங்கில் தான் அதிக பட்சமாக 75 கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே ஆரம்ப ஆர்வக்குறைவை நீக்கி இதில் அதிக கவனம் செலுத்தினால் நம்மால் ரீசனிங் பகுதியில் சிறப்பாக பதிலளிக்க முடியும். பொதுவாகவே கடந்த சில ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளில் இடம் பெறும் பாடப் பகுதிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. செய்தித்தாள்களைப் பார்த்து இந்த மாற்றங்களை அறிந்து கொள்வதுடன் சிறப்பாக அதற்கேற்ப தொடர்ந்து பயிற்சி செய்யும் போது வெற்றியை எட்டுவது நமக்கு எளிதாக அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us